Saturday, May 5, 2012

நேரம் நெருங்கி வருகிறது...


நாம் புறப்பட நேரமாகிவிட்டது
போராட்டமொன்று காத்திருக்கிறது
நெஞ்சை உரம் போட்டெடுங்கள்
குருதி வடிந்தோட சரீரம் துடிக்கிறதே..
வெற்றிக்கொடிகளை ஏற்றுங்கள்
இருகைகள் வெட்டுண்ட போதிலும்
அதை மார்பினில் குத்தியெழுப்ப
நம்பிக்கையை திடமாய் வைத்துக்கொள்..
எதிரிகளின் கணக்கு எம்மிலும் தொடர்கிறது
முந்திக்கொண்டு விடைகொடுத்து விடுங்கள்
இல்லையெனில் நாளை சிறைப்பட நேரிடும்
கத்திப்புலம்பி காரியம் நிகழவே நிகழாது
கத்தி முனையில்தான் சரித்திரம் நிகழுமானால்
சாமர்த்தியத்திற்கு நேரதாமதம் வேண்டாம்
காலமழைக்கிறது கடுகதியில் விடைகொடு
எதிரிகள் தாக்குவது உன் உடமையையே
உனது நெஞ்சின் உரத்தையல்லவே
புடம்போட்ட உன்வீரியத்தை வெளிக்கொணர
பலவரலாறுகள் பாடமாயிருக்கு உனக்கு...
தராதரம் அற்றுப்போகவில்லை
நாமும் தரணியில் தியானிக்கபிறந்தவர்களே
பலவீனத்தை அசைத்துப்பார்ப்பது
பலமானவர்களின் செயலாகயிருக்காது..
“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது
இப்பாதையில் உனது எனது என்ற
வீண்விவாதத்தின் சாலை கிடையாது
அத்தியாயம் இன்றே தொடரட்டும்
சிறுபான்மை இனத்தின் சீறிய
சினம் பதிந்து போன தடங்களென்று....

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...