Monday, December 19, 2011

விடியலொன்று காத்திருக்கிறது

வெற்றி முரசொலி ஒலிக்கப்படும்
மேலங்கள் கொட்டப்படும்
வெற்றி கிட்டவாகிட்டு
வீறு கொண்டெழு தமிழா

தயங்காமல் தடைகள் தாண்டு
தாமதங்கள் ஏற்படலாம்
சாதிக்கப்போவது நீதான்
சீறியெழு தமிழா

பயமறியா பதுங்கும் புலி நீ
பயந்து நடுங்கும் பூனையவர்கள்
பாதைகள் நடுங்கட்டும்
பாய்ந்து செல் தமிழா

எம் ஈழம் நம் தாயகமென்று
உறக்கச் சொல்லி வா
உயிரற்று எரிந்த உடல்கள்
உயிர் பெற்றெழுந்து வரும்

சென்று போனவைகளை
மனதில் பதித்தெழு தமிழா
இழந்து போனவைகளை
கண் முன் நிறுத்தியெழு தமிழா

உன் நெஞ்சின் உறமாய்
உன் உறவுகளைப்போடு
உன் குருதி கொதித்தெழும் பார்

உன் பலத்தை பகைவனறிவான்
அதனால்தான் அவன் பலத்தை
கடல்கடந்து யாசகம் கேட்டழைகிறான்

இழந்து போனவைகள் போதும்
இனி இழக்க ஏதுமில்லை தடைகளை
இடித்து நொருக்கி நட
இனிதாய் ஒரு காலம் பிறக்கும் 

நாளை உன் சன்னதிகள்
கலப்பிடமில்லா காற்றை சுவாசிக்க
நீ இன்றே இப்போவே எழு

விதியென்று வீட்டுக்குள் விழாதே
வீசியடித்து வீரணாய் வா
விடியலொன்று காத்திருக்கிறது

1 comment:

  1. கட்டாயம் விடியலொன்று காத்திருக்கிறது..



    செத்தபின்புதான் தெரிந்தது..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...