Friday, December 30, 2011

விதி....


பயன்பாடற்ற ஏதும்
நிலைக்காது.
ஆனாலும்
பயனற்றதிலுருந்தும்
பயன்கிடைக்கிறது

பயனற்றுப் போகையிலும்
ஏதோ ஒன்றை
சாதித்து விட்டுத்தான்
சென்றிருக்கும்

தன்னை
எரி்ந்து கொண்டே
மற்றவர்களுக்கு
வெளிச்சம் கொடுக்கும்
மெழுகுவர்த்தியை
மனிதன் செய்தான்

அது எரிகிறதென்பதால்
வெளிச்சத்தை அனுபவிக்கும்
மனிதர்களென்ன
பொல்லாதவர்களா..?

அல்லது
மெழுகுவர்த்தியை
உண்டுபன்னியவன்
பொல்லாதவனா..?

அல்லது
மெழுவர்த்திதான்
பாவியென்பதால்
எரிக்கப்படுகிறாதா..?

இயற்கை அதுதான்!

ஒன்றை
அனுபவிப்பதற்கும்
ஒன்றை
ஆக்குவதற்கும்
ஒன்றை
அழிப்பதற்கும்
ஒன்று
தேவைப்படுகிறது

Monday, December 26, 2011

இருட்டிப்போன உலகம்



உலகத்தாசையில் மனிதன்
அனுதினமும் அழைகிறான்
தன் கடமைதனை மறந்து
அதனோடு செல்கிறான்

அல்லும் பகலும் அனியாயம்
அர்த்தமற்ற செயற்கள்! நியாயம்

நெஞ்சத்தில் வஞ்சுமைகள்
கொஞ்சமேனும் அகமில்லை

பேர்வழி மலிந்து விட்டது
பொன்னான வாழ்வு
ஒழிந்துவிட்டது

உண்மைகளிங்கு
உயிற்று கிடக்கிறது
அதற்குப் புறம்பாக
பொய்களின்று உயிர் வாழ்கிறது

நாணையம்.!
நாக்கிலிருந்து அருந்துவிட்டது
அதனால்தான் என்னவோ
நாலுபேர் சாட்சியிங்கு
தேவையாகிறது

காசி பணம்!
கல்மண்னாகிறது -அவைகள்
கறையான்களுக்கு இறையாகிறது

ஒருவன் குருதியை
ஒருத்தன் ஓட்டுகிறான்
அதனாலிவன் மிருகத்தை
மிஞ்சி நிற்கிறான்

யுகம் முடிய..!
நேரமாகிவிட்டது - அதனால்
யுவதிகளின் வருகையும்
அதிகமாகிவிட்டது

பொருளும் பொன்னும்
பெண்ணுக்கு போதையாகிறது - அதனால்
பொருப்பான வாழ்கையிங்கு
பேதலித்து தத்தளிக்கிறது

விரலுக்கேற்ற வீக்கம்
வீழ்ச்சி கண்டு விட்டது
பொருளுக்கு மேல் பெருமை
மேலோங்கி விட்டது

காலத்தின் நிகழ்வுகளில்
மாற்றங்கள்தான்
எத்தனையெத்தனை..?

கள்ளமும் கபடமும்
கழைந்த காலம்
இனிமேல்தான் பிறக்குமா...?

அன்புடன் பாயிஸ்

Friday, December 23, 2011

ஆபாசமாகிறது உன்னால்




வாவென்று அழைப்பதற்கு
ஜாடைகள் தேவையில்லை
குறைந்த பட்ச ஆடைகள் போதும்

அது கண்களுக்கு விருந்தளிக்கும்
உணர்வுகளுக்கு விசமருந்தளிக்கும்

உனது ஆடையின் குறைப்பில்
அன்பர்கள்
அங்கலாய்பில் அழைகின்றனர்

நடந்து கொண்டே
வீதிகளில் விபச்சாரம்
அதைப்பார்ப்பதற்கே
அபச்சாரம்

நீயோ.!
ஒட்டிய ஒரு துண்டாடையில்
சமுதாயமோ
முட்டிமோதி சீர்குலைகிறது

ஆடையில் அகலத்தை அதிகப்படுத்து
ஆபத்துக்கள் விலகிச் செல்லும்

போர்த்திய பெண்களை
தீவிரவாதமென்கிறது
திறந்த பெண்களை
நாட்டின் கண்களென்கிறது
வேடிக்கையான விசித்திரம்

”காமக்கயவனால்
இளம் பெண் பழி”
இத்தலைப்பின் கருவே
நீதான் பெண்ணே

நாகரீகத்தின் புனிதம்
நரகமாக்கப்பட்டதால்
நாடே நாசமாகிக் கிடக்கிறது

சிறுபராயத்திலையே ஆபாச ஆசை
அரிவரி மறந்து அங்கமங்கமாய்
உன்னை அளந்து வைத்திருக்கிறான்

வீதிக்கு வீதி ஜன்னல்கள்
பெண்களின் அலங்கார ஆடையது
அதில் வருவது வெற்றிக்கதிர்களா..?
வெரும் வசச்சொற்களே

கண்ணகி ஒரு நாட்டையெரித்தாள்
நீங்கள் உங்களையே எரிக்கிரீர்கள்
நாகரீகமென்ற பெயரில்
ஆபாசம் வேண்டாம்
நாட்டில் நல்ல மான்புகள் நிகழட்டும்...

Wednesday, December 21, 2011

மலர்களைத் தாங்கிய முற்கள்

முற்களில் நடக்க முடியுமா
மத்திய கிழக்கு நாடுகளில்
வாழ்ந்துதான் பாருங்களேன்

பார்ப்போர் கண்களுக்கு
மலர்கள் தூவிய பாதையாயிருக்கும்
பாதங்கள் பதிந்தால் உணரும்
மலர்களைத் தாங்கியது முற்களென்று

தடுக்கி விழுந்தால் தாங்கிட
உறவுகள் சூழ்ந்திருக்கும்
அது நம் திரு நாட்டில்
இங்கு சருக்கினால் ஒட்டிய நட்பும்
எட்டிய தூரம் எகிரி ஓடும்

எங்களின் நிழல்கள் தவிர்
நிழல்களேயில்லாத இந்
நீண்ட நிலத்திற்கு இப்பஞ்சைப்
பராரிகளால்தான் அழகே

பாலை வனமானாலும்
நிலம் வறண்டு காண்பதில்லை
காரணம் எங்களின் வியர்வை

பிழிந்தெடுத்த சம்பாத்தியத்தில்
உறவுகள் காண்பது இன்பம்
சம்பாதித்த நாங்களோ காண்பது
வெறும் அற்பமான அவலங்களே

இடையிடையே நாட்டின் நினைவுகள்
ஒரு உலக உருண்டையாய்
உள்ளத்தில் சுழன்று கொண்டேயிருக்கும்
அது எந்நாளும் கிடைத்திட நெஞ்சம் ஏங்கும்


ஆயிரம் கனவுகளும் ஆசைகளும்

ஒன்றுமே நிறைவேறா நிராசையாய்
நாட்கள் நகர்ந்து கொண்டே செல்லும்

தாய் தந்தையரை தவிக்கவைத்து
அன்பு மனைவியரை ஏங்கவைத்து
பிள்ளைகளை பரிதவிக்க வைதது
பரதேசியாய் பரிதாப வாழ்கை

எப்படியிருக்கும் அபிவிருத்தி
இவர்கள் விடுகின்ற கண்ணீரில்தான்
மூழ்கிவிடுகிறதே முன்னேற்றங்கள்

வருடங்கள் ஐந்து ஆறாயினும்
வரட்சியே தொடர்ச்சியாய்
முலமேனும் முன்னேற்றமில்லை
நரக வாழ்கை இது முடியட்டும் எங்களுடன்

அன்புடன் பாயிஸ்

Monday, December 19, 2011

விடியலொன்று காத்திருக்கிறது

வெற்றி முரசொலி ஒலிக்கப்படும்
மேலங்கள் கொட்டப்படும்
வெற்றி கிட்டவாகிட்டு
வீறு கொண்டெழு தமிழா

தயங்காமல் தடைகள் தாண்டு
தாமதங்கள் ஏற்படலாம்
சாதிக்கப்போவது நீதான்
சீறியெழு தமிழா

பயமறியா பதுங்கும் புலி நீ
பயந்து நடுங்கும் பூனையவர்கள்
பாதைகள் நடுங்கட்டும்
பாய்ந்து செல் தமிழா

எம் ஈழம் நம் தாயகமென்று
உறக்கச் சொல்லி வா
உயிரற்று எரிந்த உடல்கள்
உயிர் பெற்றெழுந்து வரும்

சென்று போனவைகளை
மனதில் பதித்தெழு தமிழா
இழந்து போனவைகளை
கண் முன் நிறுத்தியெழு தமிழா

உன் நெஞ்சின் உறமாய்
உன் உறவுகளைப்போடு
உன் குருதி கொதித்தெழும் பார்

உன் பலத்தை பகைவனறிவான்
அதனால்தான் அவன் பலத்தை
கடல்கடந்து யாசகம் கேட்டழைகிறான்

இழந்து போனவைகள் போதும்
இனி இழக்க ஏதுமில்லை தடைகளை
இடித்து நொருக்கி நட
இனிதாய் ஒரு காலம் பிறக்கும் 

நாளை உன் சன்னதிகள்
கலப்பிடமில்லா காற்றை சுவாசிக்க
நீ இன்றே இப்போவே எழு

விதியென்று வீட்டுக்குள் விழாதே
வீசியடித்து வீரணாய் வா
விடியலொன்று காத்திருக்கிறது

Sunday, December 18, 2011

காதல்




இயற்கையின் அசைவுகளில்
காதல் உரசப்படுவதால்தான்
இயற்கையும் உயிரோடு வாழ்கிறது

ஆழ்மனத்தின் ஆயுட்கைதி
உயிரும் உள்ளமும் சுகமாய் வாழ்ந்திட
அதுவேதான் வெகுமதி

தின்மும் திரவமுமாக
கோர்க்கப்பாட்வொரு கலவை
மென்று பின் பருகிடும் அமிர்தமது

காமத்தின் ஒத்திகை - அது
இல்லையென்றிருந்தால்
இப்பிரபஞ்சத்தில் நீயேது..? நானேது..?

பல சாம்ராஜியங்களை
சரித்திரமாக மாற்றிய சாண்றுகள்
சமாதிகளாக பரம்சாற்றுகிறது

ஏன்..!
இராமாயணம் கூட
இரு இதயத்தின் இணைப்பினால்தான்
ஒரு நீண்ட காவியமாக
இன்று எம் கைகளில் தவழ்கிறது

காதலெனும் தண்டவாளத்தில்
வனவாசமெனும் நீண்டபயணம்
காதலுடனேயே பயணித்துப்போனது

நான் படித்த காலத்தில்
வேதங்கள் நான்கென்றார்கள்
ஏன் சொல்லாமல் விட்டார்கள்
ஐந்தாவது வேதம் காதலென்று

ஆகவே இறக்கும்போது
நான் வாழ்ந்த இடத்தில்
என் காதல் வாழட்டுமே
நானிறந்து போகிறேன்.....!

காதல் தந்த நினைவுகளோடு - பாயிஸ்


Monday, December 12, 2011

சுகமான வலிகள்


பாவையே நீ வீசிய பார்வை
என் மனதில் விழுந்து கனக்கிறது
அது முள்ளாகவும் மாறி குத்துகிறது

நீ வந்த வழி சென்ற வழிகளில்
என் மனம் எதையோ தேடுகிறது
என் விழிகளும் அதில் விழுந்து தவிக்கிறது

உன்னைப்பற்றிய சிந்தனையில் -என்
உள்ளம் உடைந்து தவிக்கிறேன்
உணர்ந்து கொள் பெண்னே...

ஒரு காலத்தில் நான் நானாகயிருந்தேன்
உன்னைக்கண்ட நேரத்திலிருந்து
என்னை நான் தேடியலைகிறேன்

என் பூப் போன்ற இதயத்தில்
நீ பூ(க்)கம்பமாயிருக்கிறாய்
என் நிலையறிந்து நீயாக இறங்கிவிடு

என் இதயத்தில் வலிக்கிறது
உன் உதடுகளை அசையவிடு
ஏதுமில்லையெனில் இல்லையென்றுவிடு
அதை மறக்க முடியாவிடினும்
காலத்தால் மனம் அமைதி பெறும்

வலிகள் நிறைந்த நிகழ்வுகளாக இருந்தாலும்
நிஜத்தில் இதயமேனோ இதமாகவுள்ளது

இத்தனையையும் நான் சுமப்பதால்
என் உள்ளமேனோ சுகப்படுகிறது
இது போதுமென்று உள்ளம் சாந்தியடைகிறது

பெண்னே......!
சுகமாய்த் துடிக்க வைக்கும் சுகம்
உன்னிலிருந்துதான் பெற்றேன் அதனால்
நாளெல்லாம் நன்றியாயிருப்பேன் உனக்கு

அன்புடன் பாயிஸ்

Monday, November 28, 2011

உறங்காத உன் நினைவுகள்



சில்லென்ற காற்று மெதுவாக
மேனியை தடவிச் செல்லும்போது
பனிமூட்டத்தினுல் இருந்து
என் தேவதையே என்னைத்
தொடுவதாய் உணர்கிறேன்

தொடாமல் முத்தங்களென்றும்
பார்க்காமலேயே பாசாங்குகளென்றும்
உன் நினைவுகளின் ஒரு பகுதியாய்
தொடராய் தொடர்ந்து செல்கிறது

உரசல்கள் இல்லாத உணர்வுகளும்
தீண்டலகள் இல்லாத தித்திப்புகளும்
நீ விலகி இருக்கையிலையே
அவைகளை அனுபவிக்க முடிகிறது

உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது

உறக்கத்தின் ஆறம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்

ஆனால் உன்னுடனான
ஊடல்களின் நினைவுகளில்
உணர்ச்சிகள் ஏனோ கிழர்ச்சியாகிறது




Sunday, November 27, 2011

எம் தந்தையர்கள்



ஊன் உறக்கம் மறந்து
உறவுகளுக்காய் உடல்வதைத்து
இயந்திரமாய் உயிரொன்று
ஓடோடி உழைக்கும்

ஒரு பொழுதில் பாதிப்பொழுது
தேடலில் கழிந்து விடுகிறது
மீதிப்பொழுது நாளை பற்றிய
சிந்தனையில் சென்றுவிடுகிறது

இல்லத்தில் சுமைகள் கணக்கவே
சுமக்க முடியாத கணத்தையும்
சுமந்து செல்லும் ஒரு மனிதப்புனிதம்
எம்மவர்களின் தந்தையே

எம்மையே நினைத்து
தன்னை மறந்து வாழும்
வரம் பெற்று வந்தவர்களோ..?

அவர்களின் உழைப்பின் ஊதியமே
எம் நோய்களின் நிவாரணம்
அவர்களின் தூங்காத நேரங்களே
எம் மதிப்பில்லா கல்வி

மன்வெட்டிய கைகளால்தான்
மௌசு தொட்டு வாழ்கிறோம்
அந்த கரங்களே பல
மகான்களையும் செதுக்கியுள்ளது

எம்மைப் பார்த்த தந்தையர்களை
நாள் கடந்து நாம் பாக்கையில்
நாதிகளற்று நடமாடுவார்கள்
நன்றிமறந்த சிலர்களால்

அன்புடன் பாயிஸ்



மழை



மழை வரும் அறிவுருத்தலை
மேகங்கள் அணிவகுத்து
கொண்டுவருதலில் சொல்லும்

காற்றலைகள் குழலூதி
வரவேற்கும், மின்னொளிகள்
வாணவெடிகளிட்டு வரவேற்கும்

வாணம் மேளதாளமிட்டு
வரவேற்கும், இயற்கை
ஆடி அசைந்து வரவேற்கும்

மனிதனோ வேறுபடுவான்
சிரித்து விளையாட சிறுவன்
புன்னகைத்து வரவேற்பான்
ஒரு போர்வைக்குள் ஒழிந்து கொள்ள
பலர் வாவென்று வரவேற்பர்

தினாந்த கூலி மட்டும் சிரித்தபடியே
வந்திட்டியா வாவென்று அழைப்பான்

உன்னால் ஆனந்தம் அதிகம்
அதைவிட அழிவுகளும் அதிகம்
ஆகவேதான் எப்பவும் போல்
அவ்வப்போது வந்து மறைகிறாயோ...?

ஐம்புதங்களின் ஆட்டத்ததை
அணைய வைக்கும் தன்மையும்
ஆனந்தப்படுத்தி அழவைகும்
அதிசிய தன்மையும் உன்னிடமே...

Sunday, November 20, 2011

பிச்சைக்காரன்



குச்சை ஊண்டும் வயதிலும்
குடிசையில் குருட்டு வாழ்கை
குடி வாழ இருட்டில் அடுப்பெரிப்பு

அம்மா என்ற மந்திரச்சொல்
உதடுகளில் தாண்டவமாட
கைகள் நீண்டிடும் அத்தருணம்

கைகள் நீளும் போதுஅக்கணமே
சுயமரியாதையும் உதிர்ந்து விடுகிறது
கூனிக்குருகின்ற பரிதாபமும்
அங்கேதான் நிகழ்கிறது

கொடுப்பவன் மனதிலோ - நான்
கொடையாளன் என்ற கர்வம்
கண்களால் ஏலணப் பார்வை
உதடுகளி்ல் எள்ளிநகைச் சிரிப்பு

ஐயோ பாவமென்று
சிலர் நினைப்பர்
இல்லாதோர் தானும் அவனுடன்
சேர்ந்திடலாமென்று நினைப்பர்

பாவமவர்கள் நிமிர்ந்து நிற்க
தூண்கள் அற்றவர்கள்
விடுகின்ற மூச்சுக்காற்று
யாசகத்தின் பிரதிபலன்கள்

வயிற்றில் பிறந்தவர்கள் வெளிச்சத்தில்
இவர்களைப் பெற்றவர்கள் இக்கஷ்டத்தில்
கண்களில் தீத்தனலோடு தனையன்கள்

வாழ்கை பலகிவிட்டது
வயிற்றுப்பசி வாழ்ந்தாக வேண்டும்
வாசப்படி தாண்டும் நேரம்
நான் சென்று வருகிறேன்

Wednesday, November 16, 2011

ஒரு கொடியில் ஈருயிர்கள்



ஆராரோ ஆரிரரோ
உண்மை உறவின்
உயிரொலி தாயின் தாலாட்டு

தரணியில் நான் பிறக்க
தாயே நீ தாங்கிய
தியாகங்கள் எத்தனை எத்தனை

என் தாயின் தியாகமே நான்.,
நான் எதை தியாகம் செய்தேன்
என்னை ஈண்டவரான அண்ணைக்கு

கருவறையில் நான் வாழும் போது
தன்னை நொநது கொண்டே
என்னை வளர்த்த தாய்

தாயின் தொப்புல் கொடியின்
தொடர்பில்தான் என்னுடல்
உலகுக்குச் சொந்தமானது

ஒரு முள கொடியில்
எனதுயிர் உருவம் பெற
கருவறையிலையே உயிர்
ஊற்றிய உறவு தாய்

எனதுயிர்ப்பாலம் கிள்ளியெறிந்த
ஒரு துண்டு தொப்புல் கொடியே...!
அதில் ஈருயிர்கள் பிறந்தன
நான் பிறக்கையில் என்னுடன்
என் தாயும் பிறந்தார்

அண்ணையே உன்னையே
உறவுகளில் உயர்த்திப்பார்கிறேன்
என்னையும் அப்படியே பார்க்கிறாய்

அண்ணையே உன்
இடைவெளிகள் நிறப்ப
இங்கு வேறேனும்
உயிர்கள் உண்டோ...?


Monday, November 14, 2011

கடல் தாண்டிய உறவுகள்



சொந்தங்கள் சோலைவனம்போமல்
சொல்லிக் கொள்ளும் படியாய்
ஒன்றுமே நெருக்கமில்லை

கடல் கடந்து வந்ததனால்
எல்லாமே இல்லாமல் போகும்
சம்பிரதாய் சடங்குகளா உறவுகள்..?

மாதங்கள் ஒன்றோ, 
இரண்டோ ஆனபின்னும்
நாங்கள் அழைக்கும் 
தொழை தூர மணியில்தான்
அவர்களின் குரல் ஒலிக்கும்

அவர்களின் தொலைபேசியொலித்து
எங்கள் காதுகள் குளிர்ந்ததில்லை
இந்த வட்டத்தினுள்தான்
சொந்தங்களின் உயிர் துடிப்பு

கட்டணமே இல்லாத 
கால் நிமிட அழைப்பைக்கூட
எங்களுக்காய் தவறியேனும் 
அழைத்திட மனம் நினைத்ததுண்டா

மனதுக்குள்ளையே ஆறுதல் பெருவோம்
அவர்களின் நிலை என்னவோ என்று
ஆனாலும் எங்களின் மனமறியும்
உண்மை நிலை என்னவென்று

கஷ்டத்தில் மட்டும் நினைக்கப்படும்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்

கண்டம் விட்டு கண்டம் தாண்டியதால்
நாங்களும் முகாமிடாத ஏழைகள்தான்
எங்களுக்கும் உணர்வுகளும், ஆசைகளுமுண்டு
அதை உங்களில் உணர்ந்தவர்கள் உண்டோ...?

நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒலு துளி அன்பை மட்டுமே ........

இது தமிழ் நண்பனொருவரின் வாழ்கைப்பாதையில் நான் கண்ட உண்மை., அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி


Wednesday, November 9, 2011

நான் தூங்க மறந்த உறக்கம்



கடலலை உரசும் கரையோரம்
என்னினைவுகள் தேங்கி நிற்க
கடலில் பட்டு வரும் காற்றும்
அவள் நினைவுள் தீண்டும் நேரமும்
ஒன்றாகிடவே கடல் மணல்
அவள் மடியாகிறது தேகமதில் சாய்ந்திட

அமைதியாய் ஒரு உறக்கம்
வானம் பார்த்த கண்கள்
வட்ட நிலா காண்கையில்
தேடிச்சென்றன அவள் நினைவுகளை

வானில் ஊர்ந்த மேகங்கள்
என் உறக்கத்தை கலைத்தது
ஊர்ந்த அவள் நினைவுகளோடு

மின்மினித்தோரணங்கள்
அவளின் தேகத்தின் மச்சங்கள்
கிள்ளிப்பார்க்க நீண்ட கைகள்
திரும்பி விட்டன
கலைந்த கனவுகளோடு

விழித்துப்பார்க்கிறேன்
கடல் நீரைக்கிழித்து
கதிரவன் காட்சி
கண்கள் வசப்பட
கலைந்தது உறக்கம்.......

Tuesday, November 8, 2011

மேகமானவளே என்னிதயம்



வறண்ட பாலை நிலம்
இருண்ட என்னிதயம்
மேகமதை தாண்டிடவே
மின்னலோடு தூறல்

இதயத்தில் பனித்தூறல்
மின்னலொலிக்கதிரில்
துளிகள் பட்டுத்தெரிக்கும்
பிரகாசக் காட்ச்சி என்னிதயத்தில்

இதயபூமி பதமாயிருக்கிறது
காதல் விதை கொண்டு வா
அது வளர உரம் என்னிடமிருக்கிறது

மேகமே நீ சிரித்து மறைகிறாய்
என்னிதயமோ உன்னைத்
தேடி வருகிறது - உன்னால்
என் ஜீவன் வாழவேண்டுமென்று

மேகமே உன்னைத்
தொடரும் என்னிதயத்தை
ஆகாயத்தில் தொங்க விடாதே..

அடை மழை வேண்டாம்
அவ்வப்போது தூறல் விடு
அமைதியாய் வாழ்ந்திடும்
என் இதயம்

இடைவெளிகளோடு இருந்த
என்னிதயம் நெருக்கமாகிவிட்டது
மேகமே நீ சூழ்ந்து கொண்டதால்

மேகமே நீ கலைந்து விடாதே
என்னிதயத்தில் தூறல் நின்று விடும்
தூறலே நீ நின்று விட்டால்
என்னிதயத் துடிப்பே அடங்கிவிடும்

அன்போடு பாயிஸ்

Saturday, November 5, 2011

ஈதுல் அல்ஹாவே..!


வருகின்ற ஈதுல் அல்ஹாவே
இருதயம் கொண்டு
இன்பமாய் அழைக்கிறோம்
வாரீர் நீர் வாரீர்

எம் விழிகள் திறந்தேயிருக்கிறது
உன் சந்தோச வருகையால்
நிறம்பிடவே அது காத்திருக்கிறது

தரத்தால் மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும்
எல்லோர் மனதிலும்
ஒரே நிலையாய் படர்ந்திடுவாயே
பன்பான அல்ஹாவே நீர் வாரீர்

புத்தாடை புதுமணம்
ஏழை எழியோருக்கு அது
ஒரு நாளில் கிடைக்கும்
இன்ப வெகுமதி நீர் வாரீர்

சந்தோசம் உன்நாளில்
கொட்டிக்கிடக்கிறது
பகிர்ந்தெடுக்க நாங்கள்
காத்திருக்கிறோம் வாரீர் நீர் வாரீர்

பத்து ரூபாய்
பங்கிட்டு கொடுக்கையில்
பரவசமாய் இன்று நான்
”எஜமானேன்” ஏழை மனதில்
இனிப்பாய் ஒரு தூண்டல்

உறவுகளால் வீடு
முழுக்க இன்பம்
வீதிகளில் பட்டாசுச்சத்தம்
அனுபவிக்க ஆசை ஏங்குது
வாரீர் நீர் வாரீர்

புதிதாய் ஒரு பார்வை
உச்சி மோர்ந்து ஒரு முத்தம்
ஆறத்தழுவிய அணைப்பு அது
பெற்றோரின் பாசம்
அளவிழந்து காணப்படும் அன்று
வாரீர் நீர் வாரீர்

இதையெல்லாம் அனுபவிக்க
நாங்களும் ஆசை கொள்கிறோம்
கடல் மட்டுமே எங்களுக்கு
தடையாய் இருக்கிறது

கடல் கடந்து ஒரு நேசன்
உன் வருகைக்காய் காத்திருக்கிறான்
உன்னில் அனுபவிக்க
எத்தனை எத்தனை இருக்கிறது
வாரீர் நீர் வாரீர்



அன்போடு பாயிஸ்



Sunday, October 30, 2011

7 ம் அறிவு




7 ம் அறிவைப்பற்றி
என்னறிவில் எழுந்த 
ஆதங்க வரிகளெனலாம்


7 ம் அறிவு
ஆண்டவனுடன் ஒரு போட்டி
அறை கூவல் விடுக்கப்பட்ட
எழுத்து வடிவினிலான ஒரு யுத்தம்

7 ம் அறிவு 
ஆறு அறிவுகளையும் மிஞ்சிய
ஆண்டவனின் ஆஸ்த்தியது
மனிதன் சுமக்க முடிந்திராத பாரம்


அதை நாம் நினைக்கையில்
அனைத்து அறிவுகளும்
அழிந்து விடும் அற்பாமாய்


ஏழாம் அறிவை 
ஏட்டில்  ஏற்ற நினைத்த
ஏ.ஆரு முருகதாஸ்
தலைப்போடு நின்று விட்டார்


அவரின் ஆறாம் அறிவில்
அகப்பட்ட இந்த ஏழாம் அறிவு
புதிதாய் காட்டவில்லை 
வியக்கும் படியாய் எதையும்


1400  வருடங்களுக்கு முன்
போதிதர்மன் என்பவரால்
போதித்தித்த ஒரு பாடமாமது
சில உண்மையான சம்பவங்களை
உறக்கச்சொன்ன கதையது


இறந்து விட்ட போதிதர்மனின்
திறமைகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்
DNA  பரிசோதனை ஊடாக


DNA  வுடைய கூற்றை 
7 ம் அறிவு சொல்ல வில்லை - அதை
6 ம் அறிவில் விஞ்ஞானம் சொல்லிவிட்டது


7 ம் அறிவு எம்மிலில்லை
ஏகன்பால் தேடிப்பார் 
அதைக் காட்ட வல்ல சக்தி
இங்கு எங்கேனுமில்லை


யார் மனதையும் குடையும் படியாய்
இங்கு இது பிணைக்கப்படவில்லை
நானும் ரசிகனே.....
7 ம் அறிவின் நாயகனுக்கு


அன்போடு பாயிஸ்







Friday, October 28, 2011

மாற்றங்கள் மாற்றி விட்டன


துள்ளித்திரிந்த காலம் - அது
சொர்க்கலோகத்து நேரம்
அதை மீட்டிப்பார்க்கிறேன் - அதை
மிஞ்ச ஒரு காலமில்லை

பொறுப்புகள் சுமத்தப்பட
பொருளாதாரம் ஒழிந்து விட்டது
தேடிப்பார்ப்பதென்று வாழ்வு
தேடத் தொடங்கின

தேடலில் மிஞ்சியது
நான் தேடியவையே...
என்னை விட்டும் போனதை
சொல்ல முடியல்லையே

நிம்மதிக்காய் - ஒரு
நிமிடமேனும் தேடுகிறேன்
விலை கொடுத்தேனும்
வாங்கித் தருவாருண்டோ..?

அம்மா மடி சாய
ஆசை என்னை சூழ்கிறது
அதுவுமிங்கில்லை
நீண்டு விட்ட தூரமாகிவிட்டது

ஆயிரம் சொத்து செல்வம்
இருந்தென்ன பயன்
ஆரத்தழுவ அமைதில்லையே

மாற்றங்கள் மாறி விட்டன
மாறா இந்த வாழ்வு
என்னுடன் ஒட்டிவிட்டன

நெஞ்சை வருடும் அந்த நாட்கள்
கெஞ்சியேனும் கிடைக்குமா..?
சென்று விட்ட நாட்களை
நெஞ்சில் சுமந்து வாழ்கிறேன்

அன்புடன் பாயிஸ்

Saturday, October 22, 2011

புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..


மனிதம் புதைக்கப்பட்டதால் - இங்கு
ஒரு மாமிசம் புதைக்கப்படுகிறது

வயிருகள் ஒட்டிப்பொகிடவே
உறவுகள் இறந்தே போயிடுமா
தாயானவளின் ஏக்கங்களோடு
இங்கோர் உயிர் பிரிகிறது

வயிற்றுப்பசி போக்க
வக்கத்துப்போன கைகள்
மன் பசி போக்கிட
தன் சிசுவை இறையாக்குகிறாள்

இத்தாயனவளின் தனயன்
தன்னை விட்டும் பிரிவதை
ஏற்கமுடியாத கண்களும் இதயமும்
இம்மனிதநேயங்களின்
உள்ளங்களை உசுப்பவில்லையா

குழந்தையை குழியில் இட்ட கைகள்
மூடத்தழுவாத பாச உணர்வு
பதரியழும் மனது - என் நெஞ்சை
கூர்கொண்ட வால்கொண்டு கீருது
உங்கள் உள்ளங்களை கீரவில்லையா..?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...