Sunday, November 20, 2011

பிச்சைக்காரன்



குச்சை ஊண்டும் வயதிலும்
குடிசையில் குருட்டு வாழ்கை
குடி வாழ இருட்டில் அடுப்பெரிப்பு

அம்மா என்ற மந்திரச்சொல்
உதடுகளில் தாண்டவமாட
கைகள் நீண்டிடும் அத்தருணம்

கைகள் நீளும் போதுஅக்கணமே
சுயமரியாதையும் உதிர்ந்து விடுகிறது
கூனிக்குருகின்ற பரிதாபமும்
அங்கேதான் நிகழ்கிறது

கொடுப்பவன் மனதிலோ - நான்
கொடையாளன் என்ற கர்வம்
கண்களால் ஏலணப் பார்வை
உதடுகளி்ல் எள்ளிநகைச் சிரிப்பு

ஐயோ பாவமென்று
சிலர் நினைப்பர்
இல்லாதோர் தானும் அவனுடன்
சேர்ந்திடலாமென்று நினைப்பர்

பாவமவர்கள் நிமிர்ந்து நிற்க
தூண்கள் அற்றவர்கள்
விடுகின்ற மூச்சுக்காற்று
யாசகத்தின் பிரதிபலன்கள்

வயிற்றில் பிறந்தவர்கள் வெளிச்சத்தில்
இவர்களைப் பெற்றவர்கள் இக்கஷ்டத்தில்
கண்களில் தீத்தனலோடு தனையன்கள்

வாழ்கை பலகிவிட்டது
வயிற்றுப்பசி வாழ்ந்தாக வேண்டும்
வாசப்படி தாண்டும் நேரம்
நான் சென்று வருகிறேன்

3 comments:

  1. சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  2. நன்றி தோழா என் பக்கம் வந்துசென்றமைக்கு

    ReplyDelete
  3. அருமை ல்யான பதிவுகள் வாழ்த்துக்கள் அன்பரே...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...