Tuesday, April 22, 2014

காய்ந்த றோஜாக்கள்

நீ திட்டிவிட்டுப் போகும்போது
நான் எட்டி நின்று பார்ப்பதனால்
சிகரத்தையே தொடுகிறேன்
சிறைபிடிக்க யாருமில்லை

நெஞ்சத்தின் உச்சத்தில்
நீ அமர்ந்திருக்கிறாய் - ஆனால்
உள்ளம் ஏனோ
அழுதுகொண்டுதானிருக்கிறது

உருண்டு புரள்வதிலையே
உறக்கம்
விடியலை அடைந்துவிடுகிறது

படித்த பாடங்கள் 
மறந்து போகிறது
பாடப்புத்தகங்கள்
மூடியே இருக்கிறது

அழகான வார்த்தைகள்
ஒழிந்து கொள்கிறது
அகராதியில் பாதிப்பக்கங்கள்
கிழிந்து போகிறது

உன்னிடம்  நீட்டிய
ஒற்றை றோஜாவோ
இராமாயண புத்தகத்தில்
காவியமாய் காய்ந்துகிடக்கிறது

மெல்லிய குரலில்
வேதனையின் ரணங்கள்
மெல்லிசை அமைக்கிறது

சுடு காட்டின் ஓசை
இசையாய் இனிக்கிறது
இறந்து போயிடவே
மனம் துடிக்கிறது

இறப்புக்குப் பின்னாலும்
காலம் முழுவதும் 
பாடிக் கொண்டேயிருக்கும்
காதலின் அழகிய நினைவுகளை.

Thursday, April 10, 2014

அண்னை ஓர் அதிசயம்


கருவறைக் காவியம்
காலம் முழுதும் எழுதும்
இவள் அதிசயம்

காலச் சுவடுகளில்
ஆதியும் அந்தமுமாய் - அவள்
நாமமே அறையப்பட்டிருக்கும்

அதிசயம் ஆனால் உண்மை
ஆண்டாண்டு காலம் அழைகிறார்கள்
இவள் மடிபோன்ற மெத்தையொன்றை
கண்டு கொள்ளலாமென்று

விஞ்ஞான உலகத்தில்
மெய்ஞானம் கண்ட உண்மை
மாதாவை மிஞ்சவொரு
ஆத்மாவும் இல்லையென்று

வேதங்கள் நாங்கும்
பெருமை கொள்கிறது - உன்
பேரன்பை பொழிவதனால்

அவளின் உயிராய்
நினைக்கும் எம்மை
என்றுமே எம் உயிராய்
மதிப்போம் எம் தாயை

Sunday, April 6, 2014

விலைபோன இரவுகள்















ஒவ்வொரு இரவுகளும்
வெவ்வேறு போர்வைகளுக்குள்
ஒழிந்துதான் கொள்கிறது

ஒவ்வொரு விடியலும்
சுமைகளத் சுமந்துதான்
உதயமாகிக் கொள்கிறது

காலத்தின் தேவையால்

உடலோ ரணங்களை
சுமக்கத்தான் செய்கிறது

இரக்கமற்ற இரவுகளோ
 தனிமைப்படுத்தியதுமில்லை
இரங்காத மனங்களோ - இறுகத் 
தழுவிக்கொள்ள மறுத்ததுமில்லை

இனி அவளின் கல்லறையில்
இரவுகளுமில்லை விடியலுமில்லை
இன்றிலிருந்துதான் இவள்
தனியாக உறங்கப்போகிறாள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...