Saturday, May 5, 2012

உன்மௌனமே திரையாகிறது


என்னுயிர் நீங்கிடாது போக
உன் பார்வையாலேயே
என்னுயிரைத் துண்டாடுகிறாய்
என் மனதைக் கிள்ளிவிடும்
உன் மௌன பாசையில்
என் நினைவுகளைப் பந்தாடுகிறாய்
நீ என் நினைவுகளில்
நெருங்கி வந்து நிற்கையில்
மொழிகளை மௌனிக்கச் செய்து
உணர்வுகளை பற்றவைக்கிறாய்
உன் மௌனமே திரையாகிவிட
திறந்திருக்கும் என் இதயவறையோ
உன் விடைவாசல் தேடித்தவிக்கிறது
உன்விழிகளைத் திறப்பதற்குப்பதிலாக
உன் இதயத்தை திறந்துபார்
அதன் அருகினில் என் உராய்வுகள்
வீற்றிருப்பதை நீ உணர்ந்துகொள்வாய்
மலரிலும் மென்மையானது காதல்
ஆனால் மலையிலும் பாரமானதுமே..
நான் மலையில் மலர்ந்திடவே நினைக்கிறேன்
“மலர்களை எரிப்பது முறையில்லை” என்று
கவிப்பேரரசு சொன்னது சரியென்றால்
என்னை நீ வதைப்பதும் முறையல்லவே..
முத்தெடுக்கச்சொல் மூழ்கிப்பார்க்கிறேன்
முள்ளில் உறங்கச்சொல் உறங்குகிறேன்
முகவரி நீயென்றால் எல்லாமே சாத்தியமே
“காதல்” எரிகின்ற தீயில்
குளிர்கின்ற சாதனம்
அதில் விறகாய் மட்டும்
என்னை வீசிச்செல்லாதே...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...