Saturday, May 5, 2012

சிறைப்பட்ட “காதல்”


நெஞ்சுக் கூண்டின் ஒப்பாரியின் ஓசை
இதயம் கதறி அழுதுகொண்டிருக்கிறது
இரவுகளும் துணையிருக்க மறுக்கிறது
நிசப்தமாய் உறங்கிய உணர்வுகள்
உன் திண்ணையில் தஞ்சம் தேடுகிறது..
உன் நினைவுகள் ராகமாய் எழும்போது
என் உணர்வுகள் உன் நினைவுகளையே
சலங்கை கட்டி ஆடிக்கொள்கிறது..
காற்றோடு மலர் கலந்துறவாடுவது போல்
உன்னைப்பற்றிய சிந்தைகளுடனேயே
என் மனம் கலந்துறவாடிக்கொள்கிறது
காகிதத்தில் மேடையமைத்து
அதை தண்ணீரீல் மெதக்கவிட்டு
அதன் மேல் ஆடிக்கொண்டிருக்கும்
நிலையாகிப்போனது என் காதல்
சொல்லவும் மெல்லவும் முடியாமல்
தொண்டைக் குழிக்கும் எனக்கும்
போராட்டம் சூடு பிடித்து விட்டது..
கல்லறையில் சாதிக்கின்ற காதல்கள்
இவைகளை சந்தித்துதான் இருக்கவேண்டும்
இல்லையென்றால் சாதனை ஏது...?
சமாதியில் என் காதல் மலர்ந்து கொள்ள
நான் ஆசை கொள்ளவில்லை..
உன் மனதோடு ஒட்டி மலர்ந்திடவே
என் மனம் உன்னை நாடியே துடிக்கிறது..
காதலை சொல்லிக் கொள்ளும் வரை
சிறையில் சித்திரவதை தேவையில்லை
இந்த வேதனையே பெரிதாகிவிட்டது..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...