Saturday, November 29, 2014

ஏழ்மை















கதவுகள் மூடப்பட்டிருந்த போதிலும்
அனுமதிகள் ஏதுமின்றியே 
எங்களை வந்து சந்தித்து போகிறார்கள்
எம்மை நேசிக்கின்ற மழைத்துளிகள்

வெள்ளம் பெருக்கெடுத்த போதிலும்
கரையில் துடிக்கின்ற மீன்கள் நாங்கள்

விளக்கின் கீழ்ப்பகுதியின் இருள்கள் நாங்கள்
மேலே எரிந்து கொண்டிருக்கும் 
அக்கினிக்குத் தெரியாது 
அன்றாடம் நாம் படும் வேதனை....



















Thursday, November 27, 2014

ஆட்சிமாற்றம்












அரச இயந்திரங்கள்
அரசியல் வாதிகள் 
அமர இடம் கிடைத்தால் 
அறுத்து விடுவார்கள்

அவர்களுக்கான உலகமிது
நீதியும் நேர்மையும்
தராசுகளில் மேலேறி நின்று 
கேலியாய் சிரிக்கிறது 

ஏமாற்றுபவனும்,ஏமாறுபவனுமாய் 
இருவர் வாழும் உலகமிது
பழகிக்கொள்ளக் கூடாதவொன்றாய் 
ஏமாற்றம் என்றும் உண்டு!

சந்தர்ப்பம் கிடைக்கும்போது 
அதிகாரம் மட்டும் ஜெயிக்கும்
அதிகாரம் உள்ள இடத்தில் 
சமாதானம் மிரண்டு ஓடும்!

புரட்சிக்காய் புறப்பட்ட
மூன்றாம் நிலை மனிதனே!
நெஞ்சின் உரத்தினால்
ஆயுதங்களைக் களைந்தவன்

புரட்சியின் சீற்றமே
ஆட்சியொன்றின் மாற்றம்.. முடிவாய்
வெற்றி, தோல்வி 
இரண்டில் ஒன்றே எஞ்சி நிற்கும் 

பயம் வெறுப்பின் அடித்தளம் 
பாய்ந்தால் பாதாளமே சுருங்கும்
புரட்சிக்காரனின் போராட்டம் 
தனக்கானதல்ல.. தன் சந்ததிக்காய்

என்றுணர்ந்து எமக்கென 
வீறிட்டெழ எம்மில் யாருண்டாம்..?
விடிந்தால் இன்னுமொரு மாற்றம் வரும்!
விடைதேடுங்கள் அதற்குள்..!

Tuesday, November 25, 2014

உனக்காய் காத்திருக்கிறேன்...












மாலை நேரக்காற்றே
என்காதருகே வந்து - என்
மங்கையவள் சொன்னதை
சத்தமின்றி சொல்லி விடு..!

காதலெனும் மழையினிலே
என் உணர்வுகளிங்கு
நணையக் கண்டதை
அவளிடமும் சொல்லிவிட்டு
திரும்பி வா காத்திருக்கிறேன்

வா
வந்துவிட்டாயே..!
என்ன சொன்னால்
அப்படியே சொல்லிவிடு

நீ மௌனிக்கிறாய்
அப்படியென்றால்..!
அவள் மௌனமாய் இருந்ததை
சொல்லாமல் சொல்கிறாயோ..?

இருகிய பாறையில்
சிலை செதுக்கவந்த
சிற்பியல்ல நானென்று
சொல்லி விடு...

என் உயிர் ஓவியம்
அழுவதைக் கண்டு
பாறையும் கறையுதென்று
சொல்ல மறக்காதே..

வறண்ட பாலைவனத்தில்
கானல் நீரைக்கண்டு ஓடுகிறேன்
தாகம் மட்டும் தீரவில்லையென்று
சொல்ல மறைக்காதே

கடைசியாய் ஒன்று
தெரிந்து கொண்டே
தண்ணீரில் சித்திரம் வறையாதேயென்று
அவள் காதல் சொல்லிவிட்டு வா
உனக்காய் காத்திருக்கிறேன்…


Monday, November 24, 2014

தொடுகை இல்லாது போனால்....
















ஒரு தினத்தில் ஓரிடத்தில்
பிந்திய பாதிப்பொழுதது
அவனும் அவளும்தான் 

தயக்கம் ஒட்டிக்கொள்ள
தவிப்பு தொடங்களாயின
இடைவெளிகள் நெருக்கமாகி
பெருமூச்சுக்கள் உரசளாயின

நீங்காமலும் தீண்டாமலும்
முனகள்கள் தீட்டப்பட்டு
தேனாய் ருசிக்களாயின
தேனியின் இறக்கையாய்
உணர்வும் உடலும்.
படபடப்பாய்த் துடிக்களாயின

முதுமை குன்றாத பருவம்..
மூச்சுக்காற்றின்னூடாய்
தேகம் சூடேறிப்போக
உதடுகளும் வறண்டு போக
உணர்வுகள் தாண்டவமாடின

நிமிர்ந்த ரோமங்கள்
சிலிர்க்க ஆரம்பித்தன
ஓரடி இடைவெளிக்குள்
ஓராயிரம் கதைகள் சொல்லின

உள்ளத்தில் பலவித ராகங்கள்
விரல்களில் வீணையின் பாகங்கள்
ஸ்ருதி தாளம் சேராத பாடல்
அரங்கேற்றம் ஆயின

ஈருயிர்களுக்குமிடையில்
ஈர்ப்புகள் அறுந்துவிழ...
கூடல்கள் இல்லாதுபோயின
இன்பங்கள் இறந்துபோயின

உணர்வலைகளோ  ஊஞ்சலின் 
இரு கயிறாய் அங்குமிங்கும்
அலைந்து கொண்யேயிருக்களாயின்...

முகப்புத்தகம்..!






















முகம் தெரியா நட்பின்
முகவரி தேடும் பயணமிது
அகம் தெரிந்து கொள்ள 
தொடங்கும் பயணமல்ல...

வெறும் சித்திரத்திலும் 
சில நிமிடப்பேச்சிலும் 
சிகரம் தொட நினைப்பது
சிந்தனைக்குரியதல்லவே..

வயதில் பாதி குறைத்துவிட்டு
வசனம் பேசியழைகிறார்கள்
வாழ்வொன்றிருப்பதை மறந்து
வழிதவறிப்போகிறார்கள்

நீங்கள் சாதிக்க உள்ளவைகள்
சாய்ந்து தூங்குகின்றது
நீங்களோ தூங்காமல்
சாய்ந்துகொண்டே போகிரீர்கள்

சூழவுள்ள நண்பர்களை மறந்து
முகம் தெரியா நட்புக்காய் 
கடல்கடந்த தூரம்வரை
பயணித்து வருகிறார்கள்

இப்பாரின் ஒவ்வொரு தெருக்களிலும்
ஒரு பொய்யான விலாசத்துக்காய்
பொருங்கோடி மக்களின்று 
பேய்களாய் அலைகிறார்கள்

பார்போற்றும் மதங்களுக்குள் 
கனிவாய் வாழ்ந்தவர்களின் 
கற்பைப்போன்ற மானங்கள்
காற்றில் போன திசைகளெங்கே..?

சிறு சிறு சபலங்களுக்காய்
சம்பிரதாயங்கள் சாகுறது 
சத்தியமொன்று மட்டுமே
சமாதிவரை பயணிக்கும்

உண்மை நட்புக்காய்
தோள் கொடுக்கும் தூரம்பார்க்காதீர்
தூக்கத்தில் இருந்தாலும் கூட
போர்வையைக் கழட்டியெழுங்கள்

துணையிருக்க யாருமின்றி..!














ஒரு ஏழையின் முனகல்கள் எனது
எழுத்துக்களில் பின்தெடர்கிறது-இது
ஏட்டில் ஆனவையல்லவே...

வாழ்க்கையின் வடிவங்களை
நிறங்களில்தான் காணமுடிகிறது
நிஜத்தில் காணமுடிவதில்லை

இங்கு வறுமையின் நிறங்களோ
போத்தல்களில் அடைக்கப்பட்டு
விலைகளுக்கு பேரம் பேசப்படுகிறது

தேவைகளை வறுமை மட்டும்
கைதுசெய்து வைத்துக்கொண்டு
வாழ்க்கையோடு விளையாடுகிறது

வட்டமிடப்பட்ட கோட்டிற்குள்
கட்டுப்பட்டு வாழ்ந்த வாழ்க்கை 
கட்டவிழ்ந்து வெளியேறி நிற்கிறது 

தேகம் இரவுக்குள் ஒழிந்தது - அதில்
உடல் மட்டும் உழைத்துக்கொண்டது
ஊதியம் கை நிரம்பக்கிடைத்தது

இப்போது இந்த வாழ்கையிலும்
கருப்பு நிறம் மட்டும்தான்
வெளிச்சத்தைக் காட்டுகிறது

இரக்கமற்ற ஒவ்வொரு இரவுகளும்
ரணங்களோடுதான் விழித்துக்கொண்டது
இதுதான் காலம் பூசிய வர்ணங்கள்

உயிரை விழுங்கிக்கொண்ட ஓரிரவு
அப்படியே உறங்கிப் போனது 
துணையிருக்க யாருமின்றி..!

யார் ஏழை..?












துண்டு துண்டுகளாய்
ஒட்டுப்போட்ட பாவாடைக்காரி
தலையில் கனத்தோடு
வாயில் முணுமுணுப்போடு 
வயல் மண் மிதித்து நடந்தாள்!


இருப்பவர்களோ அவைகளை
மறைத்து வைத்து ஏழைகளாகவே
மரணித்து போகிறார்களே
நானும் அவர்கள் வீட்டுக்கு
அருகாமையில்தான் வசிக்கிறேன்
என்பதை மறந்து விட்டு...!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...