Friday, December 30, 2011

விதி....


பயன்பாடற்ற ஏதும்
நிலைக்காது.
ஆனாலும்
பயனற்றதிலுருந்தும்
பயன்கிடைக்கிறது

பயனற்றுப் போகையிலும்
ஏதோ ஒன்றை
சாதித்து விட்டுத்தான்
சென்றிருக்கும்

தன்னை
எரி்ந்து கொண்டே
மற்றவர்களுக்கு
வெளிச்சம் கொடுக்கும்
மெழுகுவர்த்தியை
மனிதன் செய்தான்

அது எரிகிறதென்பதால்
வெளிச்சத்தை அனுபவிக்கும்
மனிதர்களென்ன
பொல்லாதவர்களா..?

அல்லது
மெழுகுவர்த்தியை
உண்டுபன்னியவன்
பொல்லாதவனா..?

அல்லது
மெழுவர்த்திதான்
பாவியென்பதால்
எரிக்கப்படுகிறாதா..?

இயற்கை அதுதான்!

ஒன்றை
அனுபவிப்பதற்கும்
ஒன்றை
ஆக்குவதற்கும்
ஒன்றை
அழிப்பதற்கும்
ஒன்று
தேவைப்படுகிறது

Monday, December 26, 2011

இருட்டிப்போன உலகம்



உலகத்தாசையில் மனிதன்
அனுதினமும் அழைகிறான்
தன் கடமைதனை மறந்து
அதனோடு செல்கிறான்

அல்லும் பகலும் அனியாயம்
அர்த்தமற்ற செயற்கள்! நியாயம்

நெஞ்சத்தில் வஞ்சுமைகள்
கொஞ்சமேனும் அகமில்லை

பேர்வழி மலிந்து விட்டது
பொன்னான வாழ்வு
ஒழிந்துவிட்டது

உண்மைகளிங்கு
உயிற்று கிடக்கிறது
அதற்குப் புறம்பாக
பொய்களின்று உயிர் வாழ்கிறது

நாணையம்.!
நாக்கிலிருந்து அருந்துவிட்டது
அதனால்தான் என்னவோ
நாலுபேர் சாட்சியிங்கு
தேவையாகிறது

காசி பணம்!
கல்மண்னாகிறது -அவைகள்
கறையான்களுக்கு இறையாகிறது

ஒருவன் குருதியை
ஒருத்தன் ஓட்டுகிறான்
அதனாலிவன் மிருகத்தை
மிஞ்சி நிற்கிறான்

யுகம் முடிய..!
நேரமாகிவிட்டது - அதனால்
யுவதிகளின் வருகையும்
அதிகமாகிவிட்டது

பொருளும் பொன்னும்
பெண்ணுக்கு போதையாகிறது - அதனால்
பொருப்பான வாழ்கையிங்கு
பேதலித்து தத்தளிக்கிறது

விரலுக்கேற்ற வீக்கம்
வீழ்ச்சி கண்டு விட்டது
பொருளுக்கு மேல் பெருமை
மேலோங்கி விட்டது

காலத்தின் நிகழ்வுகளில்
மாற்றங்கள்தான்
எத்தனையெத்தனை..?

கள்ளமும் கபடமும்
கழைந்த காலம்
இனிமேல்தான் பிறக்குமா...?

அன்புடன் பாயிஸ்

Friday, December 23, 2011

ஆபாசமாகிறது உன்னால்




வாவென்று அழைப்பதற்கு
ஜாடைகள் தேவையில்லை
குறைந்த பட்ச ஆடைகள் போதும்

அது கண்களுக்கு விருந்தளிக்கும்
உணர்வுகளுக்கு விசமருந்தளிக்கும்

உனது ஆடையின் குறைப்பில்
அன்பர்கள்
அங்கலாய்பில் அழைகின்றனர்

நடந்து கொண்டே
வீதிகளில் விபச்சாரம்
அதைப்பார்ப்பதற்கே
அபச்சாரம்

நீயோ.!
ஒட்டிய ஒரு துண்டாடையில்
சமுதாயமோ
முட்டிமோதி சீர்குலைகிறது

ஆடையில் அகலத்தை அதிகப்படுத்து
ஆபத்துக்கள் விலகிச் செல்லும்

போர்த்திய பெண்களை
தீவிரவாதமென்கிறது
திறந்த பெண்களை
நாட்டின் கண்களென்கிறது
வேடிக்கையான விசித்திரம்

”காமக்கயவனால்
இளம் பெண் பழி”
இத்தலைப்பின் கருவே
நீதான் பெண்ணே

நாகரீகத்தின் புனிதம்
நரகமாக்கப்பட்டதால்
நாடே நாசமாகிக் கிடக்கிறது

சிறுபராயத்திலையே ஆபாச ஆசை
அரிவரி மறந்து அங்கமங்கமாய்
உன்னை அளந்து வைத்திருக்கிறான்

வீதிக்கு வீதி ஜன்னல்கள்
பெண்களின் அலங்கார ஆடையது
அதில் வருவது வெற்றிக்கதிர்களா..?
வெரும் வசச்சொற்களே

கண்ணகி ஒரு நாட்டையெரித்தாள்
நீங்கள் உங்களையே எரிக்கிரீர்கள்
நாகரீகமென்ற பெயரில்
ஆபாசம் வேண்டாம்
நாட்டில் நல்ல மான்புகள் நிகழட்டும்...

Wednesday, December 21, 2011

மலர்களைத் தாங்கிய முற்கள்

முற்களில் நடக்க முடியுமா
மத்திய கிழக்கு நாடுகளில்
வாழ்ந்துதான் பாருங்களேன்

பார்ப்போர் கண்களுக்கு
மலர்கள் தூவிய பாதையாயிருக்கும்
பாதங்கள் பதிந்தால் உணரும்
மலர்களைத் தாங்கியது முற்களென்று

தடுக்கி விழுந்தால் தாங்கிட
உறவுகள் சூழ்ந்திருக்கும்
அது நம் திரு நாட்டில்
இங்கு சருக்கினால் ஒட்டிய நட்பும்
எட்டிய தூரம் எகிரி ஓடும்

எங்களின் நிழல்கள் தவிர்
நிழல்களேயில்லாத இந்
நீண்ட நிலத்திற்கு இப்பஞ்சைப்
பராரிகளால்தான் அழகே

பாலை வனமானாலும்
நிலம் வறண்டு காண்பதில்லை
காரணம் எங்களின் வியர்வை

பிழிந்தெடுத்த சம்பாத்தியத்தில்
உறவுகள் காண்பது இன்பம்
சம்பாதித்த நாங்களோ காண்பது
வெறும் அற்பமான அவலங்களே

இடையிடையே நாட்டின் நினைவுகள்
ஒரு உலக உருண்டையாய்
உள்ளத்தில் சுழன்று கொண்டேயிருக்கும்
அது எந்நாளும் கிடைத்திட நெஞ்சம் ஏங்கும்


ஆயிரம் கனவுகளும் ஆசைகளும்

ஒன்றுமே நிறைவேறா நிராசையாய்
நாட்கள் நகர்ந்து கொண்டே செல்லும்

தாய் தந்தையரை தவிக்கவைத்து
அன்பு மனைவியரை ஏங்கவைத்து
பிள்ளைகளை பரிதவிக்க வைதது
பரதேசியாய் பரிதாப வாழ்கை

எப்படியிருக்கும் அபிவிருத்தி
இவர்கள் விடுகின்ற கண்ணீரில்தான்
மூழ்கிவிடுகிறதே முன்னேற்றங்கள்

வருடங்கள் ஐந்து ஆறாயினும்
வரட்சியே தொடர்ச்சியாய்
முலமேனும் முன்னேற்றமில்லை
நரக வாழ்கை இது முடியட்டும் எங்களுடன்

அன்புடன் பாயிஸ்

Monday, December 19, 2011

விடியலொன்று காத்திருக்கிறது

வெற்றி முரசொலி ஒலிக்கப்படும்
மேலங்கள் கொட்டப்படும்
வெற்றி கிட்டவாகிட்டு
வீறு கொண்டெழு தமிழா

தயங்காமல் தடைகள் தாண்டு
தாமதங்கள் ஏற்படலாம்
சாதிக்கப்போவது நீதான்
சீறியெழு தமிழா

பயமறியா பதுங்கும் புலி நீ
பயந்து நடுங்கும் பூனையவர்கள்
பாதைகள் நடுங்கட்டும்
பாய்ந்து செல் தமிழா

எம் ஈழம் நம் தாயகமென்று
உறக்கச் சொல்லி வா
உயிரற்று எரிந்த உடல்கள்
உயிர் பெற்றெழுந்து வரும்

சென்று போனவைகளை
மனதில் பதித்தெழு தமிழா
இழந்து போனவைகளை
கண் முன் நிறுத்தியெழு தமிழா

உன் நெஞ்சின் உறமாய்
உன் உறவுகளைப்போடு
உன் குருதி கொதித்தெழும் பார்

உன் பலத்தை பகைவனறிவான்
அதனால்தான் அவன் பலத்தை
கடல்கடந்து யாசகம் கேட்டழைகிறான்

இழந்து போனவைகள் போதும்
இனி இழக்க ஏதுமில்லை தடைகளை
இடித்து நொருக்கி நட
இனிதாய் ஒரு காலம் பிறக்கும் 

நாளை உன் சன்னதிகள்
கலப்பிடமில்லா காற்றை சுவாசிக்க
நீ இன்றே இப்போவே எழு

விதியென்று வீட்டுக்குள் விழாதே
வீசியடித்து வீரணாய் வா
விடியலொன்று காத்திருக்கிறது

Sunday, December 18, 2011

காதல்




இயற்கையின் அசைவுகளில்
காதல் உரசப்படுவதால்தான்
இயற்கையும் உயிரோடு வாழ்கிறது

ஆழ்மனத்தின் ஆயுட்கைதி
உயிரும் உள்ளமும் சுகமாய் வாழ்ந்திட
அதுவேதான் வெகுமதி

தின்மும் திரவமுமாக
கோர்க்கப்பாட்வொரு கலவை
மென்று பின் பருகிடும் அமிர்தமது

காமத்தின் ஒத்திகை - அது
இல்லையென்றிருந்தால்
இப்பிரபஞ்சத்தில் நீயேது..? நானேது..?

பல சாம்ராஜியங்களை
சரித்திரமாக மாற்றிய சாண்றுகள்
சமாதிகளாக பரம்சாற்றுகிறது

ஏன்..!
இராமாயணம் கூட
இரு இதயத்தின் இணைப்பினால்தான்
ஒரு நீண்ட காவியமாக
இன்று எம் கைகளில் தவழ்கிறது

காதலெனும் தண்டவாளத்தில்
வனவாசமெனும் நீண்டபயணம்
காதலுடனேயே பயணித்துப்போனது

நான் படித்த காலத்தில்
வேதங்கள் நான்கென்றார்கள்
ஏன் சொல்லாமல் விட்டார்கள்
ஐந்தாவது வேதம் காதலென்று

ஆகவே இறக்கும்போது
நான் வாழ்ந்த இடத்தில்
என் காதல் வாழட்டுமே
நானிறந்து போகிறேன்.....!

காதல் தந்த நினைவுகளோடு - பாயிஸ்


Monday, December 12, 2011

சுகமான வலிகள்


பாவையே நீ வீசிய பார்வை
என் மனதில் விழுந்து கனக்கிறது
அது முள்ளாகவும் மாறி குத்துகிறது

நீ வந்த வழி சென்ற வழிகளில்
என் மனம் எதையோ தேடுகிறது
என் விழிகளும் அதில் விழுந்து தவிக்கிறது

உன்னைப்பற்றிய சிந்தனையில் -என்
உள்ளம் உடைந்து தவிக்கிறேன்
உணர்ந்து கொள் பெண்னே...

ஒரு காலத்தில் நான் நானாகயிருந்தேன்
உன்னைக்கண்ட நேரத்திலிருந்து
என்னை நான் தேடியலைகிறேன்

என் பூப் போன்ற இதயத்தில்
நீ பூ(க்)கம்பமாயிருக்கிறாய்
என் நிலையறிந்து நீயாக இறங்கிவிடு

என் இதயத்தில் வலிக்கிறது
உன் உதடுகளை அசையவிடு
ஏதுமில்லையெனில் இல்லையென்றுவிடு
அதை மறக்க முடியாவிடினும்
காலத்தால் மனம் அமைதி பெறும்

வலிகள் நிறைந்த நிகழ்வுகளாக இருந்தாலும்
நிஜத்தில் இதயமேனோ இதமாகவுள்ளது

இத்தனையையும் நான் சுமப்பதால்
என் உள்ளமேனோ சுகப்படுகிறது
இது போதுமென்று உள்ளம் சாந்தியடைகிறது

பெண்னே......!
சுகமாய்த் துடிக்க வைக்கும் சுகம்
உன்னிலிருந்துதான் பெற்றேன் அதனால்
நாளெல்லாம் நன்றியாயிருப்பேன் உனக்கு

அன்புடன் பாயிஸ்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...