Saturday, May 5, 2012

ஒரு கலைஞனின் தேடல்


என் விரல்முனைகளோடு செல்லுகின்ற
என் சிந்தனையின் வரிகளனைத்தையும்
அதையெழுதுகின்ற பேனாமுனையறியும்
எண்ணத்தில் எழுகின்ற எழுத்தின் எழுச்சி
பலகைகள் ஓங்கியடிக்கும் ஓசையில்தான் உள்ளது
நான் ஒரு இருட்டறையில் ஒழிந்துகொண்டு
நன்றாய் எழுதுகின்ற பலகலைஞர்களின் ரசிகன்
என்பேனா முனைகள் அறிந்துகொண்ட
என் சிந்தனையின் சிதறல்களனைத்தும்
இத்தரணியில் சிந்திட நானும் முனைகிறேன்
என்னுள் ஒழிந்து கொண்ட கனிகளை
நான் பொறுக்கியெடுத்து வீசுகிறேன்
அது அழுகிப்போவதும் அழகாய்ப்போவதும்
உங்கள் கைகளிலேயே உள்ளது..
உளி ஊண்டிப்பதிவதனால்தான்
உருவமொன்று அறிமுகமாகிறது
அதைப்பிடிக்கின்ற கைகள் தவறும்போது
கற்களாகவே அதுகிடக்கின்றன..
தேடுவதனால்தான் நான் கலைஞனாகிறேன்
தேடியவையை நீங்கள் தீட்டும்போதுதான்
மதிகூராகி கலைகளை நருக்கிச்செல்கிறது..
இதில் சிந்தனைகள் சிலநேரம்
தடுமாறி விழும்போது - என்
என் எழுத்துக்களும் சிதறிவிடக்கூடும்
அதை நீ மன்னித்து விடும்போதுதான்
உன்னில் உண்மையான கலைஞனை
நான் காண்கிறேன்.....

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...