Tuesday, January 31, 2012

மண்ணறை காணும் காதல்


மொழிகளை ஊமையாக்கி
நீ மௌனித்திருக்கிறாய்

அந்த மௌனமே
சுட்டெரிக்கும் றவையாய்
என் நெஞ்சை
துளைத்துச் செல்கிறது

சத்தமில்லாத
பாசை கூடவா
உன்னிடம்
ஊணமாகிவிட்டது..?

இப்போதுதான் புரிகிறது
நீ மௌனிப்பதே
என்னைக் கல்லறையில்
காண்பதற்கென்றே..

அப்படியே நான்
மண்ணறையானாலும்
மனம் என்னவோ
வெளியேதான் உள்ளது

அப்போதாவது
ஓரிரு வார்த்தைகளை
பேசி விட்டுச்செல்
சமாதியாவது
சாந்தியாகட்டும்

கொல்லும் பார்வை





பெண்னே நீ
எய்த பார்வையால்தான்
இங்கு பாதிப்பேர்
பரிதாபமாய்
விழுந்து கிடக்கின்றனர் என்றால்


அந்த நிலை
எனக்கு வேண்டாமென்று
நான் பார்வைகளற்றே
வாழ்ந்திட வேண்டுமென
விரும்புகிறேன்...

தொடராத வீணை



பூவையின்
கூந்தலை கோரிய
என் விரல்கள்
கோவை இதல்களையும்
கிள்ளிக்கொள்ள

புழுவாய்த் துடித்து
மெதுவாய் விழுந்தது
தறையில்

வீணையின் வடிவமாய்
தறையை அலங்கரிக்க
என் விரல்கள் துடித்தன
அதனை வாசிக்க

வீணை மூடிய சீலை
காற்றில் அசைந்தாட
இதையத்தில் மேலதாளம்

ராகம் தொடரும்
இடம் தெரியாமல்
இடைநடுவே
விரல்கள் நடனமாட
சங்கதி நீண்டு கொண்டன

சுதி நழுவாமல்
சுவை ஏரிச்செல்ல
ரகரகமாய் ராகங்கள்
பெருகி வந்தது

பல்லவி சருகாமல்
கீதம் தொடர்ந்து கொள்ள
வீணை முறிந்து கொண்டது

முழுமைபெறாத கானமுமாய்
தொடராத வீணையுமாய்
ராகம் தேடும் ரசிகன்............

Wednesday, January 25, 2012

வீதியில் தேவதை



கழைந்த கூந்தலை
காற்றோடு படரவிட்டு

கால் கொழுசின் ஓசையை
காற்றோடு தவழவிட்டு

சாலையில் - ஒரு
தேவதையின் வருகை

அதனால் சாலைநெடுகே
சங்கிலிப் போராட்டம்

அகிம்சையாய்
ஆர்ப்பாட்டம் நடக்கிறது

அவளோ
அமைதியாய் நடக்கிறாள்

என் உணர்வுகளையும்
உரசிச் செல்லும் - இவள்

எந்த ஊருத்தேரோ
என்னதான் பேரோ

கொல்லை கொள்ளும்
கொள்ளை அழகில்

என் இளமையிங்கு
கொழுந்து விட்டெரிகிறது

உயர்ந்த விழிகளோடு
பனியாத என்பார்வைகள்
இவள் செல்லுமிடமெல்லாம்
 தொடர்கிறது

பெண்னே - நீ
சீக்கிரமே மறைந்து விடு

சீறான நிலையிங்கு
நிகழட்டும்

Monday, January 23, 2012

பள்ளிக்கூடம்



நெஞ்சை வருடும்
பசுமையான நினைவுகள்
எம் பள்ளிக்கூடக் நாட்களே

அதில் பகிர்ந்து கொண்ட
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு கதை சொல்லும்

அரிவரியில்
கால்த்தடம் பதித்த
முதாலாவது கலைக்கூடம்
எம் பள்ளிக்கூடம்

அறியாமையை
அடியோடு கிள்ளியெரியும்
அன்பு ஆசான்கள்

பள்ளிப்பருவத்தில்
நட்பை பகிர்ந்து கொண்ட
பள்ளி நண்பர்கள்

பக்கத்து பக்கத்து மேசையில்
பாசத்தைப் பரிமாரிக்கொண்டே
பகிர்ந்து கொண்ட பாடங்கள்

யாருமே இல்லாத நேரம்
வகுப்பறையை இரண்டாக
புறட்டிப்போட்ட காலங்கள்

கூடி நின்று
அறட்டையடிக்க
நிழல்தரும் மரங்கள்

கொஞ்ச நேரத்துக்குள்
கொள்ளை ஆசையாய்
விளையாடி மகிழ்ந்த
விளையாட்டுக்கள்

யாரும் இல்லாத இடங்களில்
மனதுக்கு பிடித்தவளுடன்
நெஞ்சு படபடக்க
கதைத்து நின்ற நிமிடங்கள்

பரிட்சை நேரத்தில்
விழுந்து விழுந்து பாடங்களை
மீட்டிக்கொண்ட நாட்கள்

தேர்வின் முடிவுகளை
கையில் வாங்கி
உறைந்து போன நாட்கள்

பிரிவு என்பது
தவிர்க்க முடியாது என்பதை
உணர்த்திய விடுகை விழா

எல்லாம் நடந்து
எல்லோரும் பிரிந்து
எங்கங்கோ இருந்தாலும்

உள்ளம் பரவசத்தால்
பாய்ந்து பற்றிக்கொள்ளும்
பள்ளி நினைவுகள்
என்றுமே மாறாது மாறாது






Saturday, January 21, 2012

உறங்கிவிடும் உணர்வுகள்



உன்னைக் கண்டபின்
காலங்களை
நேசிக்களானேன்

சிறகுகளின்றி
விண்னைத்
தொட்டு வந்தேன்

நீ இல்லாதிருந்த
நிமிடங்களை
வெறுத்திருந்தேன்

உன்னோடிருந்த
நிமிடங்களை
ரசித்திருந்தேன்

ஒவ்வொரு வினாடியும்
ஒரு விழாக்கோலமாய்க்
கழிந்து கொண்டது

காதல் கனிய
மணப்பந்தல்
அலங்காரமிட்டது

ஓரிரு வருடங்கள்
ஓஹோன்னு சென்றது

விதி செய்த விளையாட்டு
கடல் கடந்து
தறையில் நீந்துகிறேன்

இளமையின் ஏக்கங்கள்
இலைமறை காயாய்
அழுகிவிடுகிறது

ஆசையும் அரவணைப்பும்
அருந்து விழும்
தொலை  நாடாவில்
பரிமாறப்படுகிறது

இளமையின் துடிப்புகளோடு
உறங்கிவிடும் உணர்வுகள்
எண்ணிலடங்காது

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமாகிறது

ஓயாத அலையாய்
முறிந்து விழும்
இன்ப நினைவுகள்
எனதுணர்வுகளை
நனைத்து விடுகிறது

இரவோடு போரடி
அதன் மடியில் தலைசாய்த்து
விழிகளை மூடுவதற்குள்
காலைப்பொழுது
விழித்துக்கொள்கிறது

நாட்களோடு போராட்டம்
நகராத நிமிடங்களென்று
நரகமாகிறது வாழ்கை...


Tuesday, January 10, 2012

தீண்டல்கள் இல்லாத தித்திப்புகள்



தயக்கம் ஒட்டிக்கொள்ள
தவிப்பு தொடர்ந்து விடும்

இடைவெளிகள் நெருக்கமாகி
பெருமூச்சுக்கள் உரசும்

நீங்காமலும் தீண்டாமலும்
தீட்டப்படும் முணுகள்
தேனாய் ருசிக்கும்

தேனியின் இறக்கையாய்
உணர்வும் உடலும்.
படபடப்பாய்த் துடிக்கும்

முதுமை குண்றாத பருவம்.
மூச்சுக்காற்று
சூடேறிப்போகும்

உதடுகள் வறண்டு போக
உணர்வுகள் தாண்டவமாடும்

நெட்டன நிமிர்ந்த ரோமம்
சட்டன சிலிர்க்க ஆரம்பிக்ககும்

ஓரடி இடைவெளிக்குள்
ஓராயிரம் கதைகள் சொல்லும்

தெவிட்டாத மெட்டாய்
உள்ளமதை
பாடிக்கொண்டிருக்கும்

ஈருயிருகளுக்குமிடைய
ஈர்ப்புகள் அருந்துவிழ...

கூடல்கள் இல்லாமல்
இன்பங்கள் இறக்க...

ஊஞ்சலின் இரு கைறாய்
உணர்வுகள் அங்குமிங்கும்
அலைபாய்ந்து கொண்டேயிருக்கும்




Monday, January 9, 2012

சொல்லாத காதல்



சிறு குழந்தையாய்
இதயம் அழுகிறது

இதயம் இரட்டிப்பாகி
உள்ளம் கனக்கிறது

காதலை மொழிய
உதடுகள் ஒட்டுகிறது

வெளிப்பட்ட வார்த்தைகள்
விலகிச் செல்கிறது

வேதனையாலேயே
இரவுபகல் கழிகிறது

சொல்லாமல் சுகங்கண்டே
கொல்லாமல் கொல்கிறது

மொத்தத்தில்
முள்ளில் சிக்கிய
சீலை போல..

உயிரும் உள்ளமும்
துடித்துக்கொண்டே
சுகமாய் வாழ்கிறது...

Monday, January 2, 2012

புதிதாய் பூத்திடு


வண்டு வந்து
அமர்ந்ததாலா

உன் இதழ்கள்
உதிர்ந்து போயின..

இந்தப் பூ விழியில் யார்
நீர்க்கோலம் போட்டது..

விழிகளதை தாங்கிடுமோ
வலிகழைந்து துளிகளாக்கிவிடு

விதி யாரை விட்டது
துயர் மறந்து தூங்கு..

தேனி உனை ருசித்ததாலா
நீ சிதைந்து போனாய்..

பூவே உன்
இதழ்கள் உதிர்ந்தாலும்..

இழந்தளிர்களென்னவோ
ஆராதிக்கவே செய்கிறது..

நீ மலர்ந்த
தடம் மறந்து
..
புதிதாய் பூத்திடு
மீண்டும்..

அன்புடன் பாயிஸ்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...