Saturday, May 5, 2012

மாலையில் “காதல்” உதயமாகிறது...


அந்திச் சூரியன்
மலைகளுக்குள் ஒழிந்துகொள்ள
என் அகத்தின் எண்ணங்கள்
உன்நினைவோடு அலைமோத
என் ஐம்புலங்களின் ஆட்டம்
அடங்கி மௌனித்து விடுகிறது
உன்னை சுமக்கின்ற இதயம்
பார்க்கவும் துடிக்கிறது
ஜன்னலில் மறைந்து செல்லும்
உருவமொன்றை - என்னுயிர்
கண்டிடத் துடிக்கிறது..
என்தேகத்தை ஆழுகின்ற “உயிர்”
உன் மௌனராகத்தில் துடிக்கிறது
நீ இல்லாத நேரங்களானாலும்
உன் தெருவினிலேயே நடப்பதை - என்
உள்ளம் சுகமாய் நினைக்கிறது..
நீ என்னைப் பார்த்துப்போன இடங்களில்
நான் என்னைத் தேடிப்பபார்க்கிறேன்
நீ நடந்து போன இடங்களில்
உன் கால்த் தடங்களைப் பார்க்கிறேன்..
உன்னை நான் காணவரும்
ஒரு நிமிடத்துக்குள்..
ஒரு யுக வாழ்கையை
முடித்துவிட்டுத்தான் வருகிறேன்..
உன்னைக்காணாத இடைவெளிகளுக்குள்
என்னுயிர் நசுக்கப்பட்டு விடுகிறது..
உன்னை நினைக்கின்ற நிமிடங்களில்
ஒரு யுகம் கூட ஒரு சிறுதுளியாகிவிடுகிறது.. 

சிறைப்பட்ட “காதல்”


நெஞ்சுக் கூண்டின் ஒப்பாரியின் ஓசை
இதயம் கதறி அழுதுகொண்டிருக்கிறது
இரவுகளும் துணையிருக்க மறுக்கிறது
நிசப்தமாய் உறங்கிய உணர்வுகள்
உன் திண்ணையில் தஞ்சம் தேடுகிறது..
உன் நினைவுகள் ராகமாய் எழும்போது
என் உணர்வுகள் உன் நினைவுகளையே
சலங்கை கட்டி ஆடிக்கொள்கிறது..
காற்றோடு மலர் கலந்துறவாடுவது போல்
உன்னைப்பற்றிய சிந்தைகளுடனேயே
என் மனம் கலந்துறவாடிக்கொள்கிறது
காகிதத்தில் மேடையமைத்து
அதை தண்ணீரீல் மெதக்கவிட்டு
அதன் மேல் ஆடிக்கொண்டிருக்கும்
நிலையாகிப்போனது என் காதல்
சொல்லவும் மெல்லவும் முடியாமல்
தொண்டைக் குழிக்கும் எனக்கும்
போராட்டம் சூடு பிடித்து விட்டது..
கல்லறையில் சாதிக்கின்ற காதல்கள்
இவைகளை சந்தித்துதான் இருக்கவேண்டும்
இல்லையென்றால் சாதனை ஏது...?
சமாதியில் என் காதல் மலர்ந்து கொள்ள
நான் ஆசை கொள்ளவில்லை..
உன் மனதோடு ஒட்டி மலர்ந்திடவே
என் மனம் உன்னை நாடியே துடிக்கிறது..
காதலை சொல்லிக் கொள்ளும் வரை
சிறையில் சித்திரவதை தேவையில்லை
இந்த வேதனையே பெரிதாகிவிட்டது..

நேரம் நெருங்கி வருகிறது...


நாம் புறப்பட நேரமாகிவிட்டது
போராட்டமொன்று காத்திருக்கிறது
நெஞ்சை உரம் போட்டெடுங்கள்
குருதி வடிந்தோட சரீரம் துடிக்கிறதே..
வெற்றிக்கொடிகளை ஏற்றுங்கள்
இருகைகள் வெட்டுண்ட போதிலும்
அதை மார்பினில் குத்தியெழுப்ப
நம்பிக்கையை திடமாய் வைத்துக்கொள்..
எதிரிகளின் கணக்கு எம்மிலும் தொடர்கிறது
முந்திக்கொண்டு விடைகொடுத்து விடுங்கள்
இல்லையெனில் நாளை சிறைப்பட நேரிடும்
கத்திப்புலம்பி காரியம் நிகழவே நிகழாது
கத்தி முனையில்தான் சரித்திரம் நிகழுமானால்
சாமர்த்தியத்திற்கு நேரதாமதம் வேண்டாம்
காலமழைக்கிறது கடுகதியில் விடைகொடு
எதிரிகள் தாக்குவது உன் உடமையையே
உனது நெஞ்சின் உரத்தையல்லவே
புடம்போட்ட உன்வீரியத்தை வெளிக்கொணர
பலவரலாறுகள் பாடமாயிருக்கு உனக்கு...
தராதரம் அற்றுப்போகவில்லை
நாமும் தரணியில் தியானிக்கபிறந்தவர்களே
பலவீனத்தை அசைத்துப்பார்ப்பது
பலமானவர்களின் செயலாகயிருக்காது..
“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது
இப்பாதையில் உனது எனது என்ற
வீண்விவாதத்தின் சாலை கிடையாது
அத்தியாயம் இன்றே தொடரட்டும்
சிறுபான்மை இனத்தின் சீறிய
சினம் பதிந்து போன தடங்களென்று....

உன்மௌனமே திரையாகிறது


என்னுயிர் நீங்கிடாது போக
உன் பார்வையாலேயே
என்னுயிரைத் துண்டாடுகிறாய்
என் மனதைக் கிள்ளிவிடும்
உன் மௌன பாசையில்
என் நினைவுகளைப் பந்தாடுகிறாய்
நீ என் நினைவுகளில்
நெருங்கி வந்து நிற்கையில்
மொழிகளை மௌனிக்கச் செய்து
உணர்வுகளை பற்றவைக்கிறாய்
உன் மௌனமே திரையாகிவிட
திறந்திருக்கும் என் இதயவறையோ
உன் விடைவாசல் தேடித்தவிக்கிறது
உன்விழிகளைத் திறப்பதற்குப்பதிலாக
உன் இதயத்தை திறந்துபார்
அதன் அருகினில் என் உராய்வுகள்
வீற்றிருப்பதை நீ உணர்ந்துகொள்வாய்
மலரிலும் மென்மையானது காதல்
ஆனால் மலையிலும் பாரமானதுமே..
நான் மலையில் மலர்ந்திடவே நினைக்கிறேன்
“மலர்களை எரிப்பது முறையில்லை” என்று
கவிப்பேரரசு சொன்னது சரியென்றால்
என்னை நீ வதைப்பதும் முறையல்லவே..
முத்தெடுக்கச்சொல் மூழ்கிப்பார்க்கிறேன்
முள்ளில் உறங்கச்சொல் உறங்குகிறேன்
முகவரி நீயென்றால் எல்லாமே சாத்தியமே
“காதல்” எரிகின்ற தீயில்
குளிர்கின்ற சாதனம்
அதில் விறகாய் மட்டும்
என்னை வீசிச்செல்லாதே...

காதல் எழுதும் வேதம்


உலகம் ஏதுமில்லை
இதுதான் உலகமென்று
ஈருயிர்கள் எழுதுகின்ற வேதமிது...
சாகக்கூடத் தோன்றாது
உலகம் அழியாமலேயே
உயிர் வாழத்தோணும்..
ஒருவருக்கொருவர்
உயிரைப்பகிர்ந்து கொள்ளும்
உன்னத உறவு தோன்றும்..
கண்கள் கலங்காமல்
இதயமழுவதை ஆத்மார்த்மரீதியாய்
உணரத் தோணும்..
விடைகாண முடியாத
உயிரின் வலிகளை
உடலில் உணரத்தோணும்..
எனக்காய் அவளும்
அவளுக்காய் நானும்
அர்த்தம் புரியாமல் வாழத்தோணும்..
அவளோ நானோ
இல்லாத ஒரு நிமிடத்தில்கூட
இதயம் அனாதையாகிவிட்டதாய் தோணும்..
காலமும் நேரமும்
கறை காணாத தூரத்தில்
கடந்து விட்டதாய் தோணும்...
ஒரு நேரத்தில் மட்டும்
சாகலாமென்று தோன்றும்
ஒருவர்மீது ஒருவர்
சாய்ந்து கொள்ளும்போது....
“காதல்” வாழும்போதே
எம்முடன் உயிராய்வாழட்டும்
உடல் இறந்து “காதல்“
உயிர்வாழ நான் விரும்பவில்லை..

புலன்களையாழுகின்ற காதல்


புலன் விசாரணையொன்றை
நான் நடத்துகிறேன்
என் புலன்களை ஆழுகின்ற
ஒரு பூவொன்று பிறந்ததென்று..
கண்டெடுத்த பின் என்கனவிலும்
மணம் வீசுகின்றாய் பெண்ணே...
கனவிலும் நான் கவிஞனானேன்
உன்னை தேவதையாய் கண்டபோது..
உன்தோள் புயங்களில் விழுந்து
தழம்புகின்ற உன் கூந்தலுக்குள்ளே..
ஒழிந்து கொள்ளும் உன் நிலாமுகம்
என்நெஞ்சனிலே பவனி வருகிறது..
உன்னுடனேயே பயணிக்கும்
உன்னைப்பற்றிய எனது நினைவுகள்
வழி தடுமாறித் தவிக்கிறது..
தாமரை இலையில் நடனமாடும்
தண்ணீரில் துளிகளைப் போல்
என் சிந்தையில் நடனமாடும்
உன் நினைவுத் துளிகள் - என்
காதல் தாகத்தை தீர்த்திடுமோ...?

இருளிலும் விடிகின்ற நீ...


நிலவொன்று நடந்து வருகின்ற அதிசயமும்
அழியாத ஒவியமாய் என்னிதயத்தில்
அதன் பாதச்சுவடுகள் பதிந்து வருகின்ற
இனனோர் அதிசயமும்
காதலில்தான் உள்ளதோ...?
வளர்பிறையும் தேய்பிறையும் - உனது
ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுகிறது
அதேபோல்தான் என்னை அழவைப்பதும்
சிரிக்கவைப்பதும் உனது இன்பமாய்யுள்ளதோ..?
நிலவென்று இதனால்தான் சொன்னார்களா
நீ இருட்டுக்கு மட்டும்தான் அழகானவளா..?
இல்லை என்னிதயத்தின் சுடர் விளக்கு
உன்கை பட்டுத்தான் எரியவிருக்கிறதோ..?
என்நெஞ்சுருண்டைக்குள் சுழன்றுவருகிற
வெண்ணிலாச்சுடர் நீதான் பெண்ணே..
நீ வீசுகின்ற ஒளியில்தான் என்ஜீவனில்
ரீங்காரம் விடாமல் ஒலிக்கிறது பெண்ணே..
என்ஜீவனில் விழுந்து மறைகின்ற
உனது நிலாமுகம் என்னுள்ளத்தை
வெளிக்கின்ற செவ்வானமாய்
மாற்றியமைத்து விடுகிறது பெண்ணே..
என் இருண்டுபோன மதி முழுவதும்
உன் முழுமதி உலா வருகிறது
என் இருளும் ஒளியும்
இனி உன்னால்தான் பெண்ணே..
இருளில் விடிகின்ற நீ
விடிந்ததும் மறைந்து விடாதே
நான் மறையும் வரை இருளாகவே
நீடித்திருப்பேன் பெண்ணே...

எரிகின்ற ஈழத்தின் இருதயங்கள்


அழகாய் ஒரு பாதையமைத்து
அதன் நெடுகினில் முட்களை வீசுகிற
சூட்சமக்காரர்கள் நிறைந்த உலகமிது
தரணியில் நாலா திசைகளிலும்
விச அமிலங்களைக் கலந்தெடுத்த
பன்னீரைத் தூவுகின்ற மகான்கள்
விரைந்து வருகின்ற காலமிது
யான் முந்திட வேண்டுமென்பதற்காக
யாதாயினும் சரிதானெனச்செய்து விட்டு
ஐக்கியமாகும் ஜனனாயகம்தான் இங்கு...!
நீதியின் கண்கள் மூடப்பட்டபோதிலும்
அதன் ஞானம் திறக்கப்படாமலில்லை
காத்திருக்கிறோம் எங்களுக்கும்
கதவுகள் திறக்கப்படத்தான் இருக்கிறது..
தாயகத்தாகத்தை சுமந்து கொண்டு
தண்ணீர்க் குவழையை தவறவிட்ட சேதி
தரணியின் முடிவு வரையிலும் சான்றுபயிலும்
எங்களின் சரித்திர வரலாறுகள்..
எங்களின் ஈழத்தின் இருதயங்கள்
கொழுந்து விட்டு எரிகின்ற நிலையிலும்
அதி்ல் உருகின்ற ஒவ்வொரு துளியும்
இன்னோர் உயிரை தாரைவார்த்திடுமே..
புரட்சியில் துயில்ந்துபோன உயிர்கள்
புகழுக்காய் துறந்தவையல்ல..
தாயகத்தியாகத்தை அரிந்திக்கொண்டே
தன்னுயிர்வீசி வீரீயமானவைகள்
இப்பாதையில் பெருமுட்களை காலிலும்
ஆறாத வடுக்களை உடம்பினிலும்
தாங்கிக்கொண்டே தாண்டிய பயணம்
இதில் இனியேது இன்னுமின்னும்...
ஒரு இழப்பில்தான் இன்னோர் வருகை
வருவதாக நியதி உண்டென்றால்..
நாங்களும் அடையத்தான் இருக்கிறோம்
இழப்பின் கைம்பேரியங்களை....

ஒரு கலைஞனின் தேடல்


என் விரல்முனைகளோடு செல்லுகின்ற
என் சிந்தனையின் வரிகளனைத்தையும்
அதையெழுதுகின்ற பேனாமுனையறியும்
எண்ணத்தில் எழுகின்ற எழுத்தின் எழுச்சி
பலகைகள் ஓங்கியடிக்கும் ஓசையில்தான் உள்ளது
நான் ஒரு இருட்டறையில் ஒழிந்துகொண்டு
நன்றாய் எழுதுகின்ற பலகலைஞர்களின் ரசிகன்
என்பேனா முனைகள் அறிந்துகொண்ட
என் சிந்தனையின் சிதறல்களனைத்தும்
இத்தரணியில் சிந்திட நானும் முனைகிறேன்
என்னுள் ஒழிந்து கொண்ட கனிகளை
நான் பொறுக்கியெடுத்து வீசுகிறேன்
அது அழுகிப்போவதும் அழகாய்ப்போவதும்
உங்கள் கைகளிலேயே உள்ளது..
உளி ஊண்டிப்பதிவதனால்தான்
உருவமொன்று அறிமுகமாகிறது
அதைப்பிடிக்கின்ற கைகள் தவறும்போது
கற்களாகவே அதுகிடக்கின்றன..
தேடுவதனால்தான் நான் கலைஞனாகிறேன்
தேடியவையை நீங்கள் தீட்டும்போதுதான்
மதிகூராகி கலைகளை நருக்கிச்செல்கிறது..
இதில் சிந்தனைகள் சிலநேரம்
தடுமாறி விழும்போது - என்
என் எழுத்துக்களும் சிதறிவிடக்கூடும்
அதை நீ மன்னித்து விடும்போதுதான்
உன்னில் உண்மையான கலைஞனை
நான் காண்கிறேன்.....

முள்ளில் உறங்கும் உயிர்...


என்னுயிரில் அறையப்பட்ட
உன் உயிர்ச் சிலுவை
என்றும் இறங்காது பெண்ணே..
என்னுயிரில் கலந்த
உயிர் ஓவியம் நீதான்...
என்னுணர்வுகளின்
உயிர் ஆயுதமும் நீதான்..
என்னுடலைக் கிழித்து
உயிர் வாங்கியவளும் நீதான்..
அதை அலையவிட்டு
அழகு பார்ப்பவளும் நீதான்..
முள்ளில் படுக்கையிட்டு
கம்பளியால் தடவுகிறாய்
சுகங்களைக் காணவைத்து
துடிக்கவைக்கும் இன்பமதில்...
என்னில் உன்னைப் பதிந்த
சிற்பியாவேன் நான்
நீயோ என்னை சிதைக்கிறாய்
கள்ளிச்செடி உண்ட உணர்வு
உள்ளத்தில் தெரிகிறது
நரகத்தில் இருந்து கொண்டே
நாட்களை எண்ணுவதாகிறது..
சொல்லாத காதல்
முள்ளில் உறங்கும் உயிராய்
துடித்துக்கொண்டே இருக்கும்
சொல்லி விட்டபின்
காதலின் உயிரை
தீயில் எரித்தாலும்
அது தாங்குமடி பெண்ணே...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...