Monday, March 24, 2014

குடும்பம்


காலவேகத்தினுள்
தொப்புள் கொடி உறவுகளுமா
அருந்து போகும்

கூடல்கள் இல்லையென்றால்
குடும்பங்கள் குலைந்து
கலைந்து போய்விடுமோ 

இதில் 
ஊடலில் கண்ட உறவுகளை 
என்னவென்று சொல்வதுவோ

தாய் தந்தையரைத் தொட்ட
சாதி சனங்கள் கூட - இன்று
சிதரிப்போய்க் கிடக்கிறது

உறவுகளில் 
குருதி ஓட்டத்தையேனும்
காணவில்லையே - இதில்
பாதைகளை எங்கே  தேடுவது

“குடும்பம்” 
ஒரு கோயிலென்றார்கள்.!
அது கோடி மையில் தூரம்
ஆனதேனோ...?


Thursday, March 20, 2014

ஒரு தலை றாகம்




ஒற்றையடிப் பாதையில்
ஒரு துரவியாய்
தணிப்பயணம் தொடர்கிறது

நாங்கு திசைகளிலும்
இருட்டடைப்பு - இதில்
இரவென்ன, பகலென்ன

வழிகள் தவரிப்போகும்
உள்ளத்தில் அச்சமெலும்
உயிரில் வலிகளதிகரிக்கும்

தலை சுற்றி 
நிலத்தை முத்தமிடுவாய்
நிமிர்ந்தெழ நாதியொன்றை
நாடி நிற்பாய்

தூரத்து இன்பங்களை
துன்பம் ஒன்றே
துணையாகித் துரத்தும்

சாதிக்க நினைத்தவைகளை
சமாதிகளாக்கி விட்டு
சாவின் விழிம்பில் நின்றிருப்பாய்

ஒரு போதும்
சரித்திரம் எழுதப்பபேவதில்லை
“நீ”
ஒரு தலை றாகமென்று

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...