Thursday, August 25, 2011

இனியும் வருமா


குயில் கூவும் சத்தம் கேட்டும்
உம்மாவின் கைகள் தொட்டும் 
எழுந்த நாட்கள


குப்பை கூலன் பெருக்கி
குச்சி தட்டி
குளிர் காய்ந்த நாட்டகள்


வீதீகளும், வீடுகளும்
தூரே இருந்தாலும் 
பள்ளி செல்லும் பாதையில்
பாசத்தை மட்டும் சுமந்து கொண்டு
ஒன்றாய் கூடிச்சென்றோமே 
அந்நத நாடகள்


வாரத்தில் இரண்டு நாட்கள் 
என்ன செய்தென்றரியாது 
ஏதேதோ செய்தோமே அந்த நாட்கள்


கடலலைபோன்ற என்னங்களோடு
காடு, மேடு கடைத்தெரு 
கள்ளன் பொலிஸ் விளையாட்டன்றெல்லாம்
காலம் எம்முடனே உருண்டு போன நாட்கள்


அந்திசாயும் நேரம் 
அடங்கிவிடும் துடிப்புகளோடு
அணியனியாய் தொடங்கிவிடும்
சிருசிரு வேலைகள்
பள்ளிவாசல் செல்லுதல்
பள்ளிக்கூடத்தில் தந்த வேலைகள்யென்று
அப்படியே பொழுதும் என்னோடு உறங்கிப்போன நாட்கள்


காலம் உருண்டோடவே
கடைக்கண் பார்வையில் பட்டு
உள்ளத்தை தொட்டு
உளமாற நேசித்தவளின்
உள்ளத்தோடு உறவாடி 
உறங்கிப்போன நாட்கள்


காதல் தந்த சுகம்
எதிர்காலத்தை தேடத்தொடங்கியது
உறவுகள் துறந்து 
நட்புகள் இழந்து 
பாசத்தை பரிகொடுத்து
பரிதாபமாய் தவிதவித்து 
பார்த்து நின்றவர்களுக்கு 
பதில் கொடுக்க முடியாமல்
கடல் கடந்து வந்த நாட்கள்


கடல் கடந்து வந்ததில்
அடைந்ததும் கற்றதும் 
இலாபமே - என்றாலும்
இழந்து போன அந்த நாட்களும்
பசுமை நினைவுகளும் 
பாச உணர்வுகளும்
இனியும்............?





























ஒரு தலை ராகம்



அவள் விம்பம் பட்டதும்
என் இதயவறை
திறந்து கொண்டது
காதல் என்றார்கள்
அப்போது புரியவில்லை

மீண்டும்
கண்ட இடத்தில்
காணத்துடித்தது
மனது

இதயம் துடித்தது
மனம் ஏங்கலானது

கவியென்ற பெயரில்
உளறல்கள் ஆரம்பமாயின
காரம் கனிந்தது
இனிப்பு கசந்தது
உணர்ந்து கொண்டேன்
காதல் என்று

சொல்ல நினைத்தேன்
காரணமின்றி
காலம் தள்ளிப்போனது

வாழ்ந்து கொண்டே
செத்து மடிவதானது

தேகம்
ரணகளமாய்த் துடித்தது

இதயத்தில்
ஓட்டையென்றார்கள்
அங்கேயே அதிலையே
புதைந்து விட்டது
காதலுடன் என்..........

கிராமத்து ஏழை



அழகோ அழகு
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை - அதனுள்
பட்சிகளின் கொண்டாட்டம்
பார்க்கப்
பரவசமாய் இருக்கும்

அதுவோ!
ஒரு பழைய கிராமம்
ஊர் நடுவே
ஒரு குடிசை

ஒத்தியில் வாழ்ந்தாலும்
ஒத்துப்போகவே
நிரந்தரமானது - அந்த
குடிசை வாழ்கை

ஒரு நாள் புசித்து
மறு நாள் பசித்து
வாழும் வாழ்க்கை
நிழலாய்த் தொடர்ந்தது

பார்க்கவோ பரிதாபம்
சொத்து, செல்வமோ
வெறும் பஞ்சம்தான்

கை கொடுப்பாரில்லை
மடியிலும் கனமில்லை
வெல்லமுடியாத
போர்க்களமாய் இவனின் வாழ்க்கை

காலம்
கைகூடவில்லை
காத்திருந்த நாட்கள்
வெறும்
கானல் நீராயின

இருந்ததும் இழந்து
ஒதுக்கப்பட்டான்
ஒரு மரத்தடியில் - அது
காலம் கொடுத்த
கைம்பேரியம்

இன்றோ - அவன்
நாலு பேரால் சுமக்கப்பட்டு
நாற்பது பேர் பின் செலவதைக் - காண
கண்கள் குளமாகிறது

”எங்கே சென்றார்கள் இவர்கள்”
அவன்
வாழ வளியின்றி
வாழ்ந்த போது

ஆனால்
அந்த கிராமத்து மரம் மட்டும்
ஆடி அசைந்து கொணடே இருக்கிறது
அவனின் நினைவுகளோடு

எனதுயிர் நண்பனின் பயணங்களில் நானும்



நீ - எதார்த்த வாழ்வில் - ஒரு
பருதி வெண்ணிலா
ஒவ்வொரு உதயத்திலும் - உன்
அருகினில் என் உராய்வுகள்
விழித்துப்பார்த்த போழுது - அது
வெற்றுக் கீரல்கள்
இவை அன்றைய
நிகழ்வுகளின் நிஜங்கள்

இன்று - நீ............
நீண்ட லட்சியத்தில்
நீந்திச் செல்லும்
வேட்கை வெண்ணிலா!
இந்தச் சரித்திரப் பாதையில்
நானும் வின்மினாய் உன்னுடன்...

அதனால் நம்மிருவரும்
இன்ஷா அல்லாஹ்
ஜொலிக்காலாம்!
தாரகைத் தங்கங்களாக......!!!!
உனது லட்சியம்
சம்பவமாகாமல்
சரித்திரமாகட்டும்

காதலே..!



காத்திருந்து
காதலித்த காலம்

காலாண்டாகிவிட்டது
கருவறையில்
காதலிக்கும்
காலம் இன்றாகிவிட்டது

எந்திரங்களே!
இதையங்களைப் பரிமாரிக்கொள்ளுது

ஆனால்
நீ மட்டும் - அதில்
நீந்தாமல் செல்கிறாயே
உன் இதயமென்ன.....?

காத்திருக்கத் தேவையில்லை
கடிதமும் தேவையில்லை
எக்காலத்துக்குமாய்
ஒரே ஒரு பார்வை மட்டும் வீசிச்செல்
என் விழிகள் மூடாமலேயே
என் தேகம் அடங்கி விடும்.


காதலுடன் பாயிஸ்

விபச்சாரம்




நான்கு சுவர்களுக்குள்
நாள் நட்சத்திரம் பார்த்து
நல்லவர்களின் ஆசி பெற்று
நல்ழொழுக்கத்தோடும்
புரிந்துணர்வோடும்
நடந்தேறரும் உறவு
தாம்பத்தியம்

ஆனால் இன்று

வந்தாரை வரவேற்று
விருந்தோம்பல்
உணவாக அல்லாமல்
உடம்பாக அளித்து
ஊதியம் பெறும் காலமிது

மணந்தவளை மறந்து
மாற்றாளை நினைத்து
மகிழ்வுறும் வேட்டையர்களை
என்னபெயர் கொண்டழைப்பது

அசிங்கம் என்று தெரிந்தே
அவசியமானது ஏன்

பணமா அல்லது சுகமா
”இரண்டுமே”
சுகத்துக்கு காமக்கயவர்கள்
பணத்துக்கு விலைமாதுகள்

யாரைக் குற்றம் சொல்வது
தன்னை அடகு வைத்து
அழகு பார்க்கும்
அவளைச் சொல்வதா

தன் இச்சையை
தனித்துக் கொள்ள
நாடி வரும் இவனைச் சொல்வதா

இது ஒழிய வேண்டுமென்பது
வெறும் பகல் கனவே ஆனால்
இது ஓங்கியே செல்லுமென்பது
தொடர் கதையே

புனிதங்கள் புதைக்கப்பட்டு
புதுமைகள் மேலோங்கி விட்டன

மானத்தைப் பார்க்காது
சுகத்தை மட்டும் பார்க்கும்
இம்மானிட சமுதாயம்
இருக்கும் வரை
இருந்து கொண்டே இருககும்......

ஆக்கியோன் பாயிஸ்






Wednesday, August 24, 2011

காதலால்

நேற்று வரை
நாலும் அறிந்தவன்

இன்று
தான் யாரென்று
அறிந்து கொள்ள முடியாமல்
அலைந்து திரிகிறான்

அன்றோ!
மரியாதைக்காய்
மாலை தூவி
மகிழ்வித்தவர்கள்
இன்றோ!
கல்லாலடித்து
காயப்படுத்துகின்றனர்

இத்தனைக்கும்
இவன் யார்?

மனதாற நேசித்தவள்
மணந்து கொண்டாள்
மாமன் பையனை
மனமுடைந்து போனான்
மறக்க முடியாமல்

காதல்
கற்றுக்கொடுத்ததை
கடைபிடித்துக் கொண்டிருக்கிறான்
மாணவன் என்ற பெயரை
மாற்றிக் கொண்டு

தவிப்பே துணையானது
இரவு,பகல் ஒன்றானது
உறைவிடம் சாக்கடையானது

இனி!
காலம்தான் சொல்லவேண்டும்
காதல் கற்றுக் கொடுத்ததை

ஆதலால்
காதலை கற்று மற
கடைசியில் கலங்கி நிற்காதே
காதலால்தான் என்று

என் குழந்தை

அம்மா தேடி
அழும் போது
அப்பா என்றும் அழுமே!
அப்போது ஆனந்தம்
அளவிழந்து போகுமெ!

பார்ப்போரிடம் சிரித்து
பார்க்காத என்னை
பார்த்துவிட்டால்
உறத்தழுமே!
பாசத்தின் வெளி்ப்பாடிதுவோ?
அடம்பிடித்து அழுதாலும்
அழகாய் இருக்குமே!

கொஞ்சும் மழலை மொழியால்
சி்ன்னதாய்
சத்தம் வெளிப்படுத்தி
உதடு வழியே
எச்சிலில்
என் முகம் நணைக்குமே!


என் மார்பு மிதித்து
மகிழ்ந்து விளையாடுமே!

துருதுருவென
துள்ளியாடும் போது
தட்டாந்தறையில்
தடுக்கி விழுந்து
சொந்தங்கள் தேடுமே!

பாதை வளி செல்லும்போது
என் விரலை
பல விரல்கள்
சூழ்ந்து கொள்ளுமே!
சுமூத்தாக

அடம்பிடித்து
அழுத காலம்
அரங்கேரி விட்டது
அடிச்சுவடில்
தடம் பதிக்க
ஐந்து வயதாகி விட்டது

அப்போதும்
செய்வதரியாது
செஞ்ச தவரை - என்
செவியேற்க மருக்குமே!

என் விரலை விட்டு
அந்த விரல்கள் விரிந்து கொண்டன
திகைத்துக்கொண்டே
விழித்துக்கொண்டேன்
கைக்குழந்தை

கடைக்குழந்தையானதையிட்டு

உன்னு(ள்)டன் நான்

நீயும் நானும்
பிரிந்திரிப்பதாய் யார் சொன்னார்கள் ?
அவர்களிடம் சொல்
இருவர் என்றால்தானே பிரிய
என்னுள் சங்கமித்து விட்ட
சரித்திரத்தை எழுதிக்கொடு !

இப்பிரிவு எனக்கு பிரிவாய் இல்லை
நம் காதலில் காயம் பட்ட ரணங்களையும்
சில கண்ணீர் பொழுதுகளையும்
காயப்படாமல் சுவாசித்து கொண்டிர்பேன்
உன்னைச் சேரும்வரை!

என்னுள் நீ

உன்னோடு பேசாத
என் நாட்கள் ஊமை
உன்னை பார்க்காத
என் நாட்கள் மந்தம்
உன்னோடு வாழாத
......என் நாட்கள் வெறுமை
நீ என்னை பிரிந்த
என் நாட்களோடு
நானும் மரணம்
வெற்றுடம்பில்
எங்குதேடினாலும்
எஞ்சி இருப்பது
உன் நினைவுகள் மட்டுமே

தனிமை

எத்தனையோ உறவுகள்...
என்னை சுற்றி!

எத்தனையோ இரவுகள்...
யாரும் இன்றி

ஏனோ நீ இல்லாதது மட்டும்
என்னையும் சேர்த்து நான்
உன்னிடம் தொலைந்ததை
உணர்த்துகிறது...

தனிமையின் வெறுமையை...!
தவிப்பின் வேண்டுதலை ....!

முதல் மடல்

















நான் நலம்
தாங்களின் நலமரிய ஆவல்


என் உள்ளம் கவர்
கள்வனுக்கு நான் எழுதும்
முதல் கடிதம்

நாம் பார்வைகளாலேயே
பேசிக்கொண்டிருக்கிறோம்
பாவை என் மனம்
தங்களையே நாடுகிறது

பிடித்திருக்கு என்று
சொல்லவும் முடியவி்ல்லை
பிடித்திருக்கிறதா என்று
கேட்கவும் முடியவில்லை
நாணம் என்னைத் தடுத்து
மண் பார்க்க வைக்குது

வீட்டில் என்னை
விலை பேசுகிறார்கள்
முதலின்றி
முதளாலிததுவம் அடைய நினைக்கறான்
மனமகன் என்ற
பெயர் தாங்களுடன்

நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்

வாழ்ந்தால் உன்னோடுதான்
இல்லையேல..........

என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை

உள்ளத்தில் சுமக்க நினைக்கிறேன்
அங்கேயும் அவ்வாறே...

என் தவிப்புகள்
உன் உள்ளத்தை
உரசி விடுமென நினைக்கிறேன்

இம்மடலிலேயே என்
மௌனம் கழைந்து விட்டது
உன் மௌனம் கழைவதையிட்டுத்தான் - எம்
நீண்ட பயணம்
நீடிக்கவிருக்கிறது

மீண்டும் கேட்கிறேன்
நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்

மாறிய விஞ்ஞானம் மாற்றவில்லை

உலகச் சுழற்சியில்
மனிதனும் சுழன்று கொண்டுதான் இருக்கிறான்

ஒரு காந்தமும்
இரும்பும் ஒட்டிக்கொள்கிறது
அவைகள் இன்று
மிதக்கிறது,
பறக்கிறது,
ஓடுகிறது,
மிளிர்கிறது

விஞ்ஞான அறிவியல்
வியக்கத்தக்க - பல
விந்தைகளை எமக்கு
விருந்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது

அதன் வளர்ச்சி
அவதாரமெடுத்து
ஹொலி வுட்டுகள் என்றும்
வொலி வுட்டுகள் என்றும்
அவதாரம் வரைக்கும் வந்திருக்கிறது

இதனால் இன்று
நாகரீகங்கள் நசுக்கப்பட்டு
அனாகரீகங்கள்
அந்தரத்தில் கட்டப்பட்டு
வெற்றி விழாக்களென்றும்
பொன்விழாக்களென்றும்
போற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது

விஞ்ஞான அறிவியல்
கல்வி தொட்டு
கற்ப அறை வரை
வளர்ந்து நிற்கிறது

ஆனால் மனிதனோ
மாசு படுத்துகிறான் அதன்
மகிமையை புரிந்து கொள்ளாமல்

மண்வெட்டி பிடித்த கைகள் இன்று
மௌசு தொட்டு வாழ்கிறது
இது எதனால்?

மங்கிப்போய்க்கிடந்தறிவு இன்று
மறுமலர்ச்சி பெற்றிருக்கிறது
இது எதனால்?

விஞ்ஞானம் வளர்ந்ததால்
புரிந்து கொள்ளுங்கள்
மெய்ஞானம் திறக்கப்பட்டிருக்கிறது

அதன் அறிவியலைக் கொண்டு
அசிங்கத்தை
அரங்கேற்றாதீர்கள்

பாவம் அதற்கென்ன தெரியும்
அனுபவியுங்கள் ஆனால்
அத்து மீறாதீர்கள்
அது அடையவிருக்கிறது இன்னும் பல
அரிய அறிவுகளை.

ஆக்கியோன் பாயிஸ்

அவலமொன்று....

சந்தோச வாழ்வில்
சிம்மாசனமிட்டு வாழ்ந்த
சீமாட்டிச்செம்மல்களின்
சரித்திர வாழ்கை
சரிந்து விழப்போவதை உணராத மக்கள்
சந்தித்த சம்பவமது


சல்லடிகளுக்கு சிதைந்து
சரிந்து விழுந்து கொண்டிருந்தன
சருகுகளாக உயிர்கள்




சாகசங்கள் நிகழ்த்தப்பட்டு
சமத்துவம்
சாய்ந்து தூங்கி விட்ட காலமது


இரவை அடைந்தவர்கள்
வெளிச்சத்தையடையவில்லை
பாதி இரவுக்குள்
இரத்த வெள்ளம்
இறந்த உடல்கள் மிதந்தன


அந்தோ பரிதாபம்
பலமனங்கள் ஒருமனமாய்
சங்கமித்தவை பல திசைகளிளும்
சிதறி சிதைக்கப்பட்ட அவலத்தை
காண கண் மறுத்த காலம்


யாவும் முடிந்து இன்று
யாசகம் தேடியழைகிறார்கள்
தாம் வாழ்ந்த
இதமான வாழ்கையை
தொலைத்து விட்ட மனிதர்கள்


எதார்த்த நிலை
எப்போது வருமென
ஏங்கித்தவிக்கின்றார்கள்
ஏகன் இவர்களுக்கு துணைபுரிவானாக


இது இவர்களின் நிலையானது
அன்று!


இன்று!
அரங்கேற்றப்பட்ட
அவலம் மீண்டும்
புது வடிவமெடுத்து (கிரீஸ் மனிதன்)
அரங்கேறிக்கொண்டிருக்கிறது
அனியாயமாக.....

நீயாகிய என் நினைவுகள்
















என் கண்ணில் பட்டு
நெஞ்சில் படர்ந்தவளே
என் நினைவுகளைக்
கொண்டு போனதேனோ..?

நீ வந்த வழி
சென்ற வழி மீண்டும், மீண்டும்
பார்க்கத்தூண்டுவதேனோ..?

எனைக் கடக்கின்ற நிமிடங்கள்
வருடங்களாவதேனோ..?

நினைவுகள் மறந்து
நித்தமும் நீயாவதேனோ..?
மதிமயங்கிப்போவதும் ஏனோ..?

நொடிப்பொழுதுக்குள் என்னை
நோக வைத்தவளே! - என்
நிம்மதி நிலை குலைந்து
நிர்க்கதியாகித் தவிக்கிறேன்

என் உயிரில்
ஏதோ விழுந்ததில்
றணகலளமாய்த் துடிக்கிறது

என்னுயிரை முள்ளில்
உறங்கவிட்டுச் சென்றவளே..!
அதைக்கொன்று விட்டும் சென்றிருக்கலாமே

ஆகவே
வருடமான என் நிமிடங்களை
நொடிகளாக்கி விட்டுச்செல்

நீயான எனது நினைவுகளை
எனதாக்கிவிட்டுச் செல்

நான் காலமெல்லாம்
நானாக வாழ்திருப்பேன்.

நியதி

வாசமோ!
மோசமென்றாலும்
வண்டோ!
றீங்காரமிட மறுப்பதில்லை
மலரோ வெறுப்பதுமில்லை.

தாரம்













பல உறவுகளுக்குள்
பின்னப்பட்டு

பாசத்தை பலவாறாகவும்
பரிமாறிக்கொண்ட
ஒரு ஜீவன்
பிரிக்கப்படுகிறது
தாரமென்ற அந்தஸ்தோடு

தாய்க்குப் பின்
இரத்த உறவுகளையும் தாண்டி
ஒரு நேச உயிர்...

பாதியில் இணைந்து கொண்ட கைகள்
இரு உயிர்கள் ஓர் உயிராய்
பகிர்ந்து கொண்ட பாசம்
இந்த இரு பிணைப்பிற்கும் பாலம்.
தாலிக்கொடி உறவே

தாரமான பின்னே
தாயானாலும்
உன்னை மறப்பதில்லை

உன் தாய் மறுத்த காரியம்
தன் கை கொண்டு
தயங்காமல் செய்திடுவாள்

உன் கஷ்டத்தில்
கண்ணீர் சிந்தி
கரிசனை காட்டுவாள்

அவளோ! உனக்கு
ஆடையுமாகிறாள்
தினாந்த கூலியுமாகிறாள்
இவள் பெற்று வந்த
வரம்தான் என்ன..?

தவமிருந்தேனும்
தாரமொன்று அடைந்திட வேண்டும்
தன் கை கொண்டு
தாங்கிடவும் வேண்டும்

தாய்க்கு நிகர் தாரமா.?
தாரத்துக்கு நிகர் தாயா..?
இல்லை..இல்லை
தாய்க்கு நிகர் தாயே!
தாரத்துக்கு நிகர் தாரமே!

தவமிருந்தேனும்.....



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...