Friday, January 2, 2015

உயிராய் வாழும் நினைவுகள்














இமைக்கின்ற விழிகளுக்குள்
நீ வீசிச்சென்ற பார்வைகள்
துடிக்கின்ற என்னிதயத்தில்
உயிராய்த்தான் வாழ்கின்றது..!

கோகினூர் வைரமாய்
ஜொலிக்கின்ற உன் நினைவுகள்
நிலாச்சுடராய் பிரசவித்து
என்தேகமெங்கும் படர்கிறது..!

நான் ஈன்றெடுக்கின்ற
உன்னுடனான ஞாபகங்கள்
என்னை கட்டியணைத்து
முத்தமிட்டுக் கொள்கின்றன..!

கதறியழும் என் உணர்வுகளை
தூர நின்று வேடிக்கைபார்க்கும்
உன்னுடனான நினைவுச்சிற்பம்
என்கண்ணீரைத் துடைத்துவிடுமா..?

Thursday, January 1, 2015

தலைவரின் பாதையில் தலைவன்..!











தலைவனே..
மர்ஹூம் அஷ்ரபே..
நீங்கள் எங்களை விட்டும் 
மரணித்திருக்கலாம் 

ஆனால் எமதுள்ளத்தில்
ஒழிந்திருந்து வேராய் 
வளர்ந்து செல்கிறீர்கள்..

நீங்கள் கடந்து வந்தபாதைகள்
எவ்வளவு கரடுமுரடு என்று
இப்போது உணரமுடிகிறது..

இன்று அப்பாதையில் 
எங்களுக்காய் ஒருதலைவர்
இரவு பகலாய் துரத்தப்படுகிறார்..

திரும்பும் திசையெல்லாம்
எரிகற்களால் வீசுகிறார்கள்
எப்படித் தாங்கிக்கொள்வார்.. 

நாங்கு சுவர்களுக்குள் 
ரகசிய அரசியலைச்சொன்னால்
அங்கேயும் முட்டிக்காலிட்டு 
விழுந்திடவும் மாட்டார்...

சரியான நேரத்தில் 
சரியான முடிவை எடுக்க
சரியான தலைவன் அவரே 

பலமுறைகள் 
பல உயர்பதவிகளைத் துறந்து 
பலமான ஆசனத்தை - எம்
உள்ளத்தில் நட்டிவிட்டார் ..

பேரினவாதிகளின் 
கடும்போக்கைக் கண்டு
கடுகளவும் கலங்காதவரே..

நீங்கள் கவனமாய்த்தான் 
பயணிக்கிறீர்கள் என்பது
எங்களுக்குப்புரிந்து விட்டது... 

மனமாசும் நயவஞ்சகமும்
உங்களைச் சூழ்ந்துகொண்டே
அனிவகுத்துத் துரத்துகிறது..

பல விசஜந்துக்களின் கூடாய்
இன்றைய அரசியல்களமிருக்கிறது
பத்திரமாய் நுழைந்துகொள்ளுங்கள்... 


Wednesday, December 17, 2014

எங்கே எவ்விதம் முடியும்...?












இரு இன ஒழிப்பாளர்களின்
வெறிகொண்ட பாதையில்
ஒரு நீதவானின் பயணம்

பேனா-மை அவர்கள் வசமிருக்க
வெறும்முனையை வைத்து
எப்படித்தான் எழுதப்போகிறார்கள்...?

சுயநலவாதிகளை சூழவைத்து
சுயாதீனத்துக்காய் புறப்பட்டால்
சுயமரியாதை என்னவாவது...?

முட்கள் நட்டப்பட்ட நாற்காலியில்
உங்களை அழைத்து வந்து - அதில்
அமரச் சொல்கிறார்களே...!
நீதிக்கே இந்தஇடர்பாடென்றால்
நிர்க்கதியான எம்மவர்களுக்கு...?

தலைவா உம்பயணத்தின் எல்லை
நெருங்கி வந்துவிட்டது - உம்மை
பின்தொடரும் பயணிகள் நாங்கள்
எமைத் திரும்பிப் பார்க்காமலேயே
உம்பயணம் முடிவடைந்துவிடுமா...?

சிறுபான்மை இனத்தவர்களுக்கும்
பழைய பத்திரிகைகளுக்குமிடையே
ஒரு ஒற்றுமை இருக்கிறது
தேவைகளுக்கேற்ப தூசுகள்தட்டி
அவ்வப்போது வாசிக்கப்படும்

எம்மைக் கசக்கிப்போடும் காலம்
எம்மை நோக்கியே வருகிறது
ஏனின்னும் தயக்கம் கொள்கிறீர்
ஏக இறைவன் எம்மோடில்லையா...?

பொல்லாத உலகமிது..!
மனமாசும், நயவஞ்சகமும்
உள்வாங்கிய மனிதர்களைத்தான்
இச்சமூதாயத்தில் நாட்டுநடப்பில்
நாள்தோறும் காண்கறீர்கள்

பலதரப்பட்ட மனிதர்கள்
இங்கே அங்கம் வகிக்கிறர்கள்
அதனுள் உங்களை மட்டுமே
நிஜமென்று நம்புகிறோம்

Saturday, December 13, 2014

மரணம்



















மரணம் உன்னை அழைத்திடும்
தூரத்திலேதான் உள்ளது - அதை
மரணப் படுக்கையிலும்
மறந்திடாதே மனிதா

அதனைக் குறித்த திகதி
அவன் கைவசமிருக்கிறது

கருத்துவேறுபாடுள்ள விடையத்தில்
தலையை நுழைத்துக்கொண்டு
கைகலப்பும் ஆகிவிடுகிறார்கள்
அதை மறந்து விட்டு

அந்த நாளை மறந்தே விட்டயா..?
உலக ஆசையும் களியாட்டமும்
உன்னை ஈர்த்துக்கொண்டதா..?

நாட்டுநடப்புகளாலையே
மண்டையில் நறை விழுகிறது
இரத்தக்களரிகள்
இதயத்தை சூழ்கிறது

இன்நிமிடம் என்னவாகுமோ..?
உன்கதைகேப்பார் யாரோ..?
இனிய பொழுதுகள் இறந்துபோகுமே..!
இனி என்ன செய்யப்போகிறாய்..?

நீ வாழ்ந்த வாழ்கை எங்கே..?
நீ சம்பாதித்தவைகள் எங்கே..?

நீ கோனாய் இருந்தபோது
உன்முன் கூனி நின்றவன்கூட
நீ கட்டையாய் கிடக்கும்போது
நெஞ்சை விரித்துக்கேட்பான்
ஏனின்னும் தூக்கவில்லையென்று

பொருளிலும் பொன்னிலும்
வெறுப்புகள் வரும்முன்னே
கடந்த வாழ்க்கையை நினைத்துப்பார்
மீதியுள்ள வாழ்கையை சிந்தித்துப்பார்

உன்னைப்படுக்க வைத்து
நாளுபேர் தொழும்நாள் வரும்முன்
உனக்காய்த் தொழுதுகொள்..!

நாளைய நாட்கள்
உனக்காய் காத்திருக்கிறது..!
அது சுட்டெரிக்கும் நெருப்பா..?
இல்லை சுவனத்தின் சுகந்தங்களா..?

அதன் அடித்தளத்தின் நெருப்பு புதிது
உலகை கருகிடச்செய்யும் வல்லமையதற்கு
நிஜங்களை உன்முன் நிறுத்தி
போலிகளைக் களைந்தெரிந்துவிடு

நீ அந்த நாளை அடையும்போது
நிச்சியமாய் கதறியழுவாய் - அப்போது
உன் கண்ணீர்த்துளிளென்ன
அவைகளை அனைத்துவிடுமா..?

மரணத்துக்காய் உன் தசைகள்
ரணமாய்த் துடிக்கும்முன்
ஒரு முறை நன்றாய் அழுதுவிடு..

Saturday, November 29, 2014

ஏழ்மை















கதவுகள் மூடப்பட்டிருந்த போதிலும்
அனுமதிகள் ஏதுமின்றியே 
எங்களை வந்து சந்தித்து போகிறார்கள்
எம்மை நேசிக்கின்ற மழைத்துளிகள்

வெள்ளம் பெருக்கெடுத்த போதிலும்
கரையில் துடிக்கின்ற மீன்கள் நாங்கள்

விளக்கின் கீழ்ப்பகுதியின் இருள்கள் நாங்கள்
மேலே எரிந்து கொண்டிருக்கும் 
அக்கினிக்குத் தெரியாது 
அன்றாடம் நாம் படும் வேதனை....



















Thursday, November 27, 2014

ஆட்சிமாற்றம்












அரச இயந்திரங்கள்
அரசியல் வாதிகள் 
அமர இடம் கிடைத்தால் 
அறுத்து விடுவார்கள்

அவர்களுக்கான உலகமிது
நீதியும் நேர்மையும்
தராசுகளில் மேலேறி நின்று 
கேலியாய் சிரிக்கிறது 

ஏமாற்றுபவனும்,ஏமாறுபவனுமாய் 
இருவர் வாழும் உலகமிது
பழகிக்கொள்ளக் கூடாதவொன்றாய் 
ஏமாற்றம் என்றும் உண்டு!

சந்தர்ப்பம் கிடைக்கும்போது 
அதிகாரம் மட்டும் ஜெயிக்கும்
அதிகாரம் உள்ள இடத்தில் 
சமாதானம் மிரண்டு ஓடும்!

புரட்சிக்காய் புறப்பட்ட
மூன்றாம் நிலை மனிதனே!
நெஞ்சின் உரத்தினால்
ஆயுதங்களைக் களைந்தவன்

புரட்சியின் சீற்றமே
ஆட்சியொன்றின் மாற்றம்.. முடிவாய்
வெற்றி, தோல்வி 
இரண்டில் ஒன்றே எஞ்சி நிற்கும் 

பயம் வெறுப்பின் அடித்தளம் 
பாய்ந்தால் பாதாளமே சுருங்கும்
புரட்சிக்காரனின் போராட்டம் 
தனக்கானதல்ல.. தன் சந்ததிக்காய்

என்றுணர்ந்து எமக்கென 
வீறிட்டெழ எம்மில் யாருண்டாம்..?
விடிந்தால் இன்னுமொரு மாற்றம் வரும்!
விடைதேடுங்கள் அதற்குள்..!

Tuesday, November 25, 2014

உனக்காய் காத்திருக்கிறேன்...












மாலை நேரக்காற்றே
என்காதருகே வந்து - என்
மங்கையவள் சொன்னதை
சத்தமின்றி சொல்லி விடு..!

காதலெனும் மழையினிலே
என் உணர்வுகளிங்கு
நணையக் கண்டதை
அவளிடமும் சொல்லிவிட்டு
திரும்பி வா காத்திருக்கிறேன்

வா
வந்துவிட்டாயே..!
என்ன சொன்னால்
அப்படியே சொல்லிவிடு

நீ மௌனிக்கிறாய்
அப்படியென்றால்..!
அவள் மௌனமாய் இருந்ததை
சொல்லாமல் சொல்கிறாயோ..?

இருகிய பாறையில்
சிலை செதுக்கவந்த
சிற்பியல்ல நானென்று
சொல்லி விடு...

என் உயிர் ஓவியம்
அழுவதைக் கண்டு
பாறையும் கறையுதென்று
சொல்ல மறக்காதே..

வறண்ட பாலைவனத்தில்
கானல் நீரைக்கண்டு ஓடுகிறேன்
தாகம் மட்டும் தீரவில்லையென்று
சொல்ல மறைக்காதே

கடைசியாய் ஒன்று
தெரிந்து கொண்டே
தண்ணீரில் சித்திரம் வறையாதேயென்று
அவள் காதல் சொல்லிவிட்டு வா
உனக்காய் காத்திருக்கிறேன்…


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...