Thursday, February 23, 2012

ஈழக் கிழவனின் முணுகள்


வாணமிடும் கண்ணீரை
உள்ளே அழைக்கும்
சிறு ஓலைக்குடிசை

சின்னஞ்சிறு பருவம்
சினுங்களிடும் பசி
வரவு தேடி அப்பன்
அப்பன் வரவு காத்து தாய்

உலையில் இட்ட அரிசி
உப்புக்குச் சொந்தமில்லை
உறக்கப்பத்திய நெருப்பு
உண்ணும் பதத்தில் அன்னம்

உருட்டிப்பிடிச்ச சோறு
ஊட்டிவிட்ட கரங்கள்
கால் மடித்தொட்டில்
கலங்கமில்லா தாலாட்டு

விழி மூடிக்கொள்ள
அமைதிகாத்த இரவு
அரசன் வாழ்கைதான்
பிஞ்சு வயதனில்

கோன் வாழ்கை கோணிப்போய்
கூனி வாழும்போது
நிம்மதி தேடியழைகிறேன்

ஓலைக்குடிசையிலும்
நிலாச்சோற்றிலும்
கோடி இன்பங்கள்
கொட்டிக்கிடந்ததாய்
ஒருகாலம் இருந்தது.....

உயிர்க் காதல்



என் விழிமடலைக்குள்
நீ சிக்கிக்கொள்ளும்போது
என்னிதயத்தில் சாஹறா
பெருக்கெடுத்து வருகிறது

நீயென் தோழ்களில்
சாய்ந்து கொள்ளும்போது
என் ஏட்டிலிருந்த மரணம்
அழிந்து விட்டது

வாழும் உயிர் அர்த்தப்படுகிறது
ஆனந்தம் எல்லையற்றுப்போகிறது
காதல் ஒன்றே உலகமாகிறது
நீயென் செல்வமானதால்

வேதம் நாங்கும் விளக்கவில்லை
உன்போன்ற காதலொன்றை
அதை நானிங்கு படிக்கிறேன்
உயிருள்ள வேதமொன்றில்

உலகோடு எல்லாமே அழிந்துவிடும்
உன்மீது நான் கொண்ட காதல்
அழியாத உயிர்க்காவியமாய்
மருலோகத்திலும் உயிர்வாழும்

Thursday, February 16, 2012

விடைகண்ட நிமிடங்கள்



நிலவொளியில் நிழலாட
தொட்டம் தொட்டமாய் இருலாடும்
இருலாடும் இடமெல்லாம்
நான் மறைந்தாடிச் செல்வேன்

எதிர்பார்த்த இரவுக்கிளி
நிலவோடு கதைபேசி
நலவின் ஆயுலை
நீடித்துக்கொண்டிருந்தாள்

ஒரு துண்டு இருட்டில்
அவளின் துணியாட
என் கண்விழிகள்
அதைக் கைது செய்தன

கலவரம் இல்லாமல்
அவளும் ஒத்துழைத்தாள்
கைதிட்ட நானோ
காரணம் தேடி நின்றேன்

மேகக் கூட்டத்தினுல்
புகுந்து ஒழிந்து கொள்ளும் நிலா
புதுப் புதுக்காரணங்களை
காட்டிச் சென்றது

பலமாய் வீசிய காற்று
புது வித உணர்வுகளை
தூண்டிச் சென்றது

இயற்கை என்னோடு
விளையாடிச் செல்ல
இருலோடு ஒட்டியிருந்தவளோ
என் தோழில் சாய்ந்து - என்
உலகமே நீதான் என்றால்

விலங்கிட்ட என் மனமோ
விடுதலையை
அறிவித்துச் சென்றது






அகத்தின் வலி



தனி வெள்ளைக் காகிதமாய்
என்னிதயம் எதுவும்
எழுதப்படாமலேயே இருந்தது

அதில் நீ வந்து
என்னுயிராய் உன்னை
உயில் எழுதிச் சென்றாய்

அதைப்படிக்க படிக்க
இன்பம் சுரந்து வந்தது
உலகம் மறந்து போனது

சுவர் ஓவியமாய் என்னுள்ளத்தில்
அறையப்பட்ட உன் நிலாமுகம்
பிரகாசமாய் ஜொளிக்கிறது

“காதல்” காதல்தான் - அது
உனக்குப் புரிகிறதோ என்னவோ

இப்போதல்லாம் உன்னைப்பற்றி
கவிதை எழுத நினைக்கிறேன்
அப்போது உனது பெயரையே
பக்கம்பக்கமாய் எழுதிவிடுகிறேன்

உன்முகம் தந்த பரிசு
என் அகத்தில் வலிக்கிறது
அது சுகமாய் இருந்தாலும்
மனதை இருகக் கட்டி
கொலை செய்கிறது

சுடுமணலில்  துடிக்கும் புழுகூட
சுகங்கண்டு விடும்
உள்ளிருந்து பதறும் இதயம்
என்னவென்று சொல்வது

இருளோடு அழும் இதயம்
உதிக்காமலேயே
அஸ்த்தமனம் ஆகிடுமோ..?

Wednesday, February 15, 2012

இன்று காதல் பயணம்



இரு பூக்கொப்புகளோடு
இரு இதயங்களின்
பண்டமாற்றத்தில்
தொடங்கப்போகிறது
புதியவர்களின் காதல்
எதிர்எதிர் இதயங்கள்
உரசிக்கொண்டே காதல்
பத்திக்கொள்ளப்போகிறது
அதில் பூக்களும் பூக்கும்
புரியாத புதிர்களும் தோன்றும்
புதிதாய் உறவொன்றும் உதிக்கும்
இதயங்களின் வெற்றிடங்கள்
நிறப்பப்படும் இன்பநாள்
நிறப்பப்பட்ட இதயங்களின்
இன்பச்சுமையை
இறக்கிவைக்கும் இனியநாள்
திருமணத்துக்கு முன்
ஒத்திகையும் இன்றுதான்
தொடங்கப்போகிறது
இரு உயிரெனும் தண்டவாளத்தில்
ஒரே  இதயமாய் “காதல்” பயணித்து
அது முடிவடையுமிடம்  “திருமணம்”
பாதைகள் வளைவானவைகள்தான்
பயணிக்கும் நீங்களும்
வளைந்துதான் பயணிக்கவேண்டும்
பரிமாறிக்கொண்ட “பூக்கள்”
கருகிவிடும
ஆனால் “இதயங்கள்”
உயிர் வாழும்
காதலெனும் பயணத்தில்
பயணிக்கும் புதியவர்களே
உங்கள் பயணத்தைத் தொட
வாழ்துகிறேன் பூத்தூவுகிறேன்.

Thursday, February 2, 2012

இயற்கையோடு ஒரு பொழுது











கடல் நீரைக்கிழித்து
ஆதவன் எழும்போது
படபடவென சிறகுகளை விரித்து
கூடு கலைக்கும் பறவைகள்

தழும்புகின்ற கடல் நீரில்
வெளிக்கின்ற செவ்வாணம்
துடிக்கின்ற ஒரு அழகிய ஓவியம்

கறைகளை முத்தமிடுகின்ற
அலைகளென்றும் அந்த அலைகளை
வெல்லுகின்ற படகுகளென்றும்
அந்தப்படகுகளைப் படம்பிடிக்கும்
நீரலைகளென்றும் பரவசக்காட்சி
எங்கும் படர்ந்து கிடக்கும்

துருதுருவென தரதரவென்று
தறையை வாரிக்கொண்டு
மாயமாய் மறைந்து விடும் நண்டுகள்












ஆகாயத்தில் கூந்தலை விரித்து
ஒன்றோடு ஒன்று கதைபேசி
இனிக்கும் இசையாய்
காதுகளையும் குளிரவைக்கும்
தென்னையின் ஓலைகள்

கொஞ்சம் அப்படியே
மேற்கே திரும்புகிறேன்
பூமி பச்சிலையால் மூடப்பட்டு
அங்கேயும் அலையாய்
ஆடியசைந்து தவழ்கிறது...

சலசலவென ஓடும் நீரோடை
அதைப் பருகிக்கொள்ளும்
வேளாமைகள் - அதில்
தூங்கிய பனித்துளிகள்
என்னிதயத்தை நனைத்துவிடுகிறது










முட்டியால் தலைசெய்து
காய்ந்த வைக்கோலால்
உடல் அமைத்து
ஒட்டுத்துணியால் அலங்கரித்து
வயளை காத்து நிற்கும்
அழகான காட்டுபொம்மை

நான்கைந்து ஓலைகளால்
கூறையமைத்து
வலைந்து நெழிந்த கம்புகளால்
தூண்கள் அமைத்து
ஒற்றை விளக்குடன்
ஒலி வீசி்க்கொண்டிருக்கும்
அற்புதமான பரன்கள்

ஆங்காங்கே மலைப்பபூண்டுகள்
அதன் நடுவே மறைந்து செல்லும்
இறவின் எதிரி கதிரவனோடு
முகிலினங்களை விலக்கி
சந்திரனின் வருகை












அது வாணத்தின் முற்றுப்புள்ளி
அதைச் சுற்றி கமாப்புள்ளியாய்
தொடர்ந்து செல்லும் நச்சத்திரங்கள்

நிலவோடு போட்டிபோட்டு
முன்னும் பின்னுமாய்
படர்ந்து வரும்  மேகக்கூட்டங்கள்
என் இமைகளையும் மெதுவாய்
தடவிச்செல்ல மூடிய விழிகளோடு
நானும் உறங்கிப்போனேன்




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...