Saturday, May 5, 2012

எரிகின்ற ஈழத்தின் இருதயங்கள்


அழகாய் ஒரு பாதையமைத்து
அதன் நெடுகினில் முட்களை வீசுகிற
சூட்சமக்காரர்கள் நிறைந்த உலகமிது
தரணியில் நாலா திசைகளிலும்
விச அமிலங்களைக் கலந்தெடுத்த
பன்னீரைத் தூவுகின்ற மகான்கள்
விரைந்து வருகின்ற காலமிது
யான் முந்திட வேண்டுமென்பதற்காக
யாதாயினும் சரிதானெனச்செய்து விட்டு
ஐக்கியமாகும் ஜனனாயகம்தான் இங்கு...!
நீதியின் கண்கள் மூடப்பட்டபோதிலும்
அதன் ஞானம் திறக்கப்படாமலில்லை
காத்திருக்கிறோம் எங்களுக்கும்
கதவுகள் திறக்கப்படத்தான் இருக்கிறது..
தாயகத்தாகத்தை சுமந்து கொண்டு
தண்ணீர்க் குவழையை தவறவிட்ட சேதி
தரணியின் முடிவு வரையிலும் சான்றுபயிலும்
எங்களின் சரித்திர வரலாறுகள்..
எங்களின் ஈழத்தின் இருதயங்கள்
கொழுந்து விட்டு எரிகின்ற நிலையிலும்
அதி்ல் உருகின்ற ஒவ்வொரு துளியும்
இன்னோர் உயிரை தாரைவார்த்திடுமே..
புரட்சியில் துயில்ந்துபோன உயிர்கள்
புகழுக்காய் துறந்தவையல்ல..
தாயகத்தியாகத்தை அரிந்திக்கொண்டே
தன்னுயிர்வீசி வீரீயமானவைகள்
இப்பாதையில் பெருமுட்களை காலிலும்
ஆறாத வடுக்களை உடம்பினிலும்
தாங்கிக்கொண்டே தாண்டிய பயணம்
இதில் இனியேது இன்னுமின்னும்...
ஒரு இழப்பில்தான் இன்னோர் வருகை
வருவதாக நியதி உண்டென்றால்..
நாங்களும் அடையத்தான் இருக்கிறோம்
இழப்பின் கைம்பேரியங்களை....

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...