Thursday, November 27, 2014

ஆட்சிமாற்றம்












அரச இயந்திரங்கள்
அரசியல் வாதிகள் 
அமர இடம் கிடைத்தால் 
அறுத்து விடுவார்கள்

அவர்களுக்கான உலகமிது
நீதியும் நேர்மையும்
தராசுகளில் மேலேறி நின்று 
கேலியாய் சிரிக்கிறது 

ஏமாற்றுபவனும்,ஏமாறுபவனுமாய் 
இருவர் வாழும் உலகமிது
பழகிக்கொள்ளக் கூடாதவொன்றாய் 
ஏமாற்றம் என்றும் உண்டு!

சந்தர்ப்பம் கிடைக்கும்போது 
அதிகாரம் மட்டும் ஜெயிக்கும்
அதிகாரம் உள்ள இடத்தில் 
சமாதானம் மிரண்டு ஓடும்!

புரட்சிக்காய் புறப்பட்ட
மூன்றாம் நிலை மனிதனே!
நெஞ்சின் உரத்தினால்
ஆயுதங்களைக் களைந்தவன்

புரட்சியின் சீற்றமே
ஆட்சியொன்றின் மாற்றம்.. முடிவாய்
வெற்றி, தோல்வி 
இரண்டில் ஒன்றே எஞ்சி நிற்கும் 

பயம் வெறுப்பின் அடித்தளம் 
பாய்ந்தால் பாதாளமே சுருங்கும்
புரட்சிக்காரனின் போராட்டம் 
தனக்கானதல்ல.. தன் சந்ததிக்காய்

என்றுணர்ந்து எமக்கென 
வீறிட்டெழ எம்மில் யாருண்டாம்..?
விடிந்தால் இன்னுமொரு மாற்றம் வரும்!
விடைதேடுங்கள் அதற்குள்..!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...