Wednesday, August 24, 2011

தனிமை

எத்தனையோ உறவுகள்...
என்னை சுற்றி!

எத்தனையோ இரவுகள்...
யாரும் இன்றி

ஏனோ நீ இல்லாதது மட்டும்
என்னையும் சேர்த்து நான்
உன்னிடம் தொலைந்ததை
உணர்த்துகிறது...

தனிமையின் வெறுமையை...!
தவிப்பின் வேண்டுதலை ....!

முதல் மடல்

















நான் நலம்
தாங்களின் நலமரிய ஆவல்


என் உள்ளம் கவர்
கள்வனுக்கு நான் எழுதும்
முதல் கடிதம்

நாம் பார்வைகளாலேயே
பேசிக்கொண்டிருக்கிறோம்
பாவை என் மனம்
தங்களையே நாடுகிறது

பிடித்திருக்கு என்று
சொல்லவும் முடியவி்ல்லை
பிடித்திருக்கிறதா என்று
கேட்கவும் முடியவில்லை
நாணம் என்னைத் தடுத்து
மண் பார்க்க வைக்குது

வீட்டில் என்னை
விலை பேசுகிறார்கள்
முதலின்றி
முதளாலிததுவம் அடைய நினைக்கறான்
மனமகன் என்ற
பெயர் தாங்களுடன்

நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்

வாழ்ந்தால் உன்னோடுதான்
இல்லையேல..........

என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை

உள்ளத்தில் சுமக்க நினைக்கிறேன்
அங்கேயும் அவ்வாறே...

என் தவிப்புகள்
உன் உள்ளத்தை
உரசி விடுமென நினைக்கிறேன்

இம்மடலிலேயே என்
மௌனம் கழைந்து விட்டது
உன் மௌனம் கழைவதையிட்டுத்தான் - எம்
நீண்ட பயணம்
நீடிக்கவிருக்கிறது

மீண்டும் கேட்கிறேன்
நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்

மாறிய விஞ்ஞானம் மாற்றவில்லை

உலகச் சுழற்சியில்
மனிதனும் சுழன்று கொண்டுதான் இருக்கிறான்

ஒரு காந்தமும்
இரும்பும் ஒட்டிக்கொள்கிறது
அவைகள் இன்று
மிதக்கிறது,
பறக்கிறது,
ஓடுகிறது,
மிளிர்கிறது

விஞ்ஞான அறிவியல்
வியக்கத்தக்க - பல
விந்தைகளை எமக்கு
விருந்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது

அதன் வளர்ச்சி
அவதாரமெடுத்து
ஹொலி வுட்டுகள் என்றும்
வொலி வுட்டுகள் என்றும்
அவதாரம் வரைக்கும் வந்திருக்கிறது

இதனால் இன்று
நாகரீகங்கள் நசுக்கப்பட்டு
அனாகரீகங்கள்
அந்தரத்தில் கட்டப்பட்டு
வெற்றி விழாக்களென்றும்
பொன்விழாக்களென்றும்
போற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது

விஞ்ஞான அறிவியல்
கல்வி தொட்டு
கற்ப அறை வரை
வளர்ந்து நிற்கிறது

ஆனால் மனிதனோ
மாசு படுத்துகிறான் அதன்
மகிமையை புரிந்து கொள்ளாமல்

மண்வெட்டி பிடித்த கைகள் இன்று
மௌசு தொட்டு வாழ்கிறது
இது எதனால்?

மங்கிப்போய்க்கிடந்தறிவு இன்று
மறுமலர்ச்சி பெற்றிருக்கிறது
இது எதனால்?

விஞ்ஞானம் வளர்ந்ததால்
புரிந்து கொள்ளுங்கள்
மெய்ஞானம் திறக்கப்பட்டிருக்கிறது

அதன் அறிவியலைக் கொண்டு
அசிங்கத்தை
அரங்கேற்றாதீர்கள்

பாவம் அதற்கென்ன தெரியும்
அனுபவியுங்கள் ஆனால்
அத்து மீறாதீர்கள்
அது அடையவிருக்கிறது இன்னும் பல
அரிய அறிவுகளை.

ஆக்கியோன் பாயிஸ்

அவலமொன்று....

சந்தோச வாழ்வில்
சிம்மாசனமிட்டு வாழ்ந்த
சீமாட்டிச்செம்மல்களின்
சரித்திர வாழ்கை
சரிந்து விழப்போவதை உணராத மக்கள்
சந்தித்த சம்பவமது


சல்லடிகளுக்கு சிதைந்து
சரிந்து விழுந்து கொண்டிருந்தன
சருகுகளாக உயிர்கள்




சாகசங்கள் நிகழ்த்தப்பட்டு
சமத்துவம்
சாய்ந்து தூங்கி விட்ட காலமது


இரவை அடைந்தவர்கள்
வெளிச்சத்தையடையவில்லை
பாதி இரவுக்குள்
இரத்த வெள்ளம்
இறந்த உடல்கள் மிதந்தன


அந்தோ பரிதாபம்
பலமனங்கள் ஒருமனமாய்
சங்கமித்தவை பல திசைகளிளும்
சிதறி சிதைக்கப்பட்ட அவலத்தை
காண கண் மறுத்த காலம்


யாவும் முடிந்து இன்று
யாசகம் தேடியழைகிறார்கள்
தாம் வாழ்ந்த
இதமான வாழ்கையை
தொலைத்து விட்ட மனிதர்கள்


எதார்த்த நிலை
எப்போது வருமென
ஏங்கித்தவிக்கின்றார்கள்
ஏகன் இவர்களுக்கு துணைபுரிவானாக


இது இவர்களின் நிலையானது
அன்று!


இன்று!
அரங்கேற்றப்பட்ட
அவலம் மீண்டும்
புது வடிவமெடுத்து (கிரீஸ் மனிதன்)
அரங்கேறிக்கொண்டிருக்கிறது
அனியாயமாக.....

நீயாகிய என் நினைவுகள்
















என் கண்ணில் பட்டு
நெஞ்சில் படர்ந்தவளே
என் நினைவுகளைக்
கொண்டு போனதேனோ..?

நீ வந்த வழி
சென்ற வழி மீண்டும், மீண்டும்
பார்க்கத்தூண்டுவதேனோ..?

எனைக் கடக்கின்ற நிமிடங்கள்
வருடங்களாவதேனோ..?

நினைவுகள் மறந்து
நித்தமும் நீயாவதேனோ..?
மதிமயங்கிப்போவதும் ஏனோ..?

நொடிப்பொழுதுக்குள் என்னை
நோக வைத்தவளே! - என்
நிம்மதி நிலை குலைந்து
நிர்க்கதியாகித் தவிக்கிறேன்

என் உயிரில்
ஏதோ விழுந்ததில்
றணகலளமாய்த் துடிக்கிறது

என்னுயிரை முள்ளில்
உறங்கவிட்டுச் சென்றவளே..!
அதைக்கொன்று விட்டும் சென்றிருக்கலாமே

ஆகவே
வருடமான என் நிமிடங்களை
நொடிகளாக்கி விட்டுச்செல்

நீயான எனது நினைவுகளை
எனதாக்கிவிட்டுச் செல்

நான் காலமெல்லாம்
நானாக வாழ்திருப்பேன்.

நியதி

வாசமோ!
மோசமென்றாலும்
வண்டோ!
றீங்காரமிட மறுப்பதில்லை
மலரோ வெறுப்பதுமில்லை.

தாரம்













பல உறவுகளுக்குள்
பின்னப்பட்டு

பாசத்தை பலவாறாகவும்
பரிமாறிக்கொண்ட
ஒரு ஜீவன்
பிரிக்கப்படுகிறது
தாரமென்ற அந்தஸ்தோடு

தாய்க்குப் பின்
இரத்த உறவுகளையும் தாண்டி
ஒரு நேச உயிர்...

பாதியில் இணைந்து கொண்ட கைகள்
இரு உயிர்கள் ஓர் உயிராய்
பகிர்ந்து கொண்ட பாசம்
இந்த இரு பிணைப்பிற்கும் பாலம்.
தாலிக்கொடி உறவே

தாரமான பின்னே
தாயானாலும்
உன்னை மறப்பதில்லை

உன் தாய் மறுத்த காரியம்
தன் கை கொண்டு
தயங்காமல் செய்திடுவாள்

உன் கஷ்டத்தில்
கண்ணீர் சிந்தி
கரிசனை காட்டுவாள்

அவளோ! உனக்கு
ஆடையுமாகிறாள்
தினாந்த கூலியுமாகிறாள்
இவள் பெற்று வந்த
வரம்தான் என்ன..?

தவமிருந்தேனும்
தாரமொன்று அடைந்திட வேண்டும்
தன் கை கொண்டு
தாங்கிடவும் வேண்டும்

தாய்க்கு நிகர் தாரமா.?
தாரத்துக்கு நிகர் தாயா..?
இல்லை..இல்லை
தாய்க்கு நிகர் தாயே!
தாரத்துக்கு நிகர் தாரமே!

தவமிருந்தேனும்.....



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...