பல உறவுகளுக்குள்
பின்னப்பட்டு
பாசத்தை பலவாறாகவும்
பரிமாறிக்கொண்ட
ஒரு ஜீவன்
பிரிக்கப்படுகிறது
தாரமென்ற அந்தஸ்தோடு
தாய்க்குப் பின்
இரத்த உறவுகளையும் தாண்டி
ஒரு நேச உயிர்...
பாதியில் இணைந்து கொண்ட கைகள்
இரு உயிர்கள் ஓர் உயிராய்
பகிர்ந்து கொண்ட பாசம்
இந்த இரு பிணைப்பிற்கும் பாலம்.
தாலிக்கொடி உறவே
தாரமான பின்னே
தாயானாலும்
உன்னை மறப்பதில்லை
உன் தாய் மறுத்த காரியம்
தன் கை கொண்டு
தயங்காமல் செய்திடுவாள்
உன் கஷ்டத்தில்
கண்ணீர் சிந்தி
கரிசனை காட்டுவாள்
அவளோ! உனக்கு
ஆடையுமாகிறாள்
தினாந்த கூலியுமாகிறாள்
இவள் பெற்று வந்த
வரம்தான் என்ன..?
தவமிருந்தேனும்
தாரமொன்று அடைந்திட வேண்டும்
தன் கை கொண்டு
தாங்கிடவும் வேண்டும்
தாய்க்கு நிகர் தாரமா.?
தாரத்துக்கு நிகர் தாயா..?
இல்லை..இல்லை
தாய்க்கு நிகர் தாயே!
தாரத்துக்கு நிகர் தாரமே!
தவமிருந்தேனும்.....
No comments:
Post a Comment