Wednesday, August 24, 2011

மாறிய விஞ்ஞானம் மாற்றவில்லை

உலகச் சுழற்சியில்
மனிதனும் சுழன்று கொண்டுதான் இருக்கிறான்

ஒரு காந்தமும்
இரும்பும் ஒட்டிக்கொள்கிறது
அவைகள் இன்று
மிதக்கிறது,
பறக்கிறது,
ஓடுகிறது,
மிளிர்கிறது

விஞ்ஞான அறிவியல்
வியக்கத்தக்க - பல
விந்தைகளை எமக்கு
விருந்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது

அதன் வளர்ச்சி
அவதாரமெடுத்து
ஹொலி வுட்டுகள் என்றும்
வொலி வுட்டுகள் என்றும்
அவதாரம் வரைக்கும் வந்திருக்கிறது

இதனால் இன்று
நாகரீகங்கள் நசுக்கப்பட்டு
அனாகரீகங்கள்
அந்தரத்தில் கட்டப்பட்டு
வெற்றி விழாக்களென்றும்
பொன்விழாக்களென்றும்
போற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது

விஞ்ஞான அறிவியல்
கல்வி தொட்டு
கற்ப அறை வரை
வளர்ந்து நிற்கிறது

ஆனால் மனிதனோ
மாசு படுத்துகிறான் அதன்
மகிமையை புரிந்து கொள்ளாமல்

மண்வெட்டி பிடித்த கைகள் இன்று
மௌசு தொட்டு வாழ்கிறது
இது எதனால்?

மங்கிப்போய்க்கிடந்தறிவு இன்று
மறுமலர்ச்சி பெற்றிருக்கிறது
இது எதனால்?

விஞ்ஞானம் வளர்ந்ததால்
புரிந்து கொள்ளுங்கள்
மெய்ஞானம் திறக்கப்பட்டிருக்கிறது

அதன் அறிவியலைக் கொண்டு
அசிங்கத்தை
அரங்கேற்றாதீர்கள்

பாவம் அதற்கென்ன தெரியும்
அனுபவியுங்கள் ஆனால்
அத்து மீறாதீர்கள்
அது அடையவிருக்கிறது இன்னும் பல
அரிய அறிவுகளை.

ஆக்கியோன் பாயிஸ்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...