என் கண்ணில் பட்டு
நெஞ்சில் படர்ந்தவளே
என் நினைவுகளைக்
கொண்டு போனதேனோ..?
நீ வந்த வழி
சென்ற வழி மீண்டும், மீண்டும்
பார்க்கத்தூண்டுவதேனோ..?
எனைக் கடக்கின்ற நிமிடங்கள்
வருடங்களாவதேனோ..?
நினைவுகள் மறந்து
நித்தமும் நீயாவதேனோ..?
மதிமயங்கிப்போவதும் ஏனோ..?
நொடிப்பொழுதுக்குள் என்னை
நோக வைத்தவளே! - என்
நிம்மதி நிலை குலைந்து
நிர்க்கதியாகித் தவிக்கிறேன்
என் உயிரில்
ஏதோ விழுந்ததில்
றணகலளமாய்த் துடிக்கிறது
என்னுயிரை முள்ளில்
உறங்கவிட்டுச் சென்றவளே..!
அதைக்கொன்று விட்டும் சென்றிருக்கலாமே
ஆகவே
வருடமான என் நிமிடங்களை
நொடிகளாக்கி விட்டுச்செல்
நீயான எனது நினைவுகளை
எனதாக்கிவிட்டுச் செல்
நான் காலமெல்லாம்
நானாக வாழ்திருப்பேன்.
No comments:
Post a Comment