Wednesday, August 24, 2011

அவலமொன்று....

சந்தோச வாழ்வில்
சிம்மாசனமிட்டு வாழ்ந்த
சீமாட்டிச்செம்மல்களின்
சரித்திர வாழ்கை
சரிந்து விழப்போவதை உணராத மக்கள்
சந்தித்த சம்பவமது


சல்லடிகளுக்கு சிதைந்து
சரிந்து விழுந்து கொண்டிருந்தன
சருகுகளாக உயிர்கள்




சாகசங்கள் நிகழ்த்தப்பட்டு
சமத்துவம்
சாய்ந்து தூங்கி விட்ட காலமது


இரவை அடைந்தவர்கள்
வெளிச்சத்தையடையவில்லை
பாதி இரவுக்குள்
இரத்த வெள்ளம்
இறந்த உடல்கள் மிதந்தன


அந்தோ பரிதாபம்
பலமனங்கள் ஒருமனமாய்
சங்கமித்தவை பல திசைகளிளும்
சிதறி சிதைக்கப்பட்ட அவலத்தை
காண கண் மறுத்த காலம்


யாவும் முடிந்து இன்று
யாசகம் தேடியழைகிறார்கள்
தாம் வாழ்ந்த
இதமான வாழ்கையை
தொலைத்து விட்ட மனிதர்கள்


எதார்த்த நிலை
எப்போது வருமென
ஏங்கித்தவிக்கின்றார்கள்
ஏகன் இவர்களுக்கு துணைபுரிவானாக


இது இவர்களின் நிலையானது
அன்று!


இன்று!
அரங்கேற்றப்பட்ட
அவலம் மீண்டும்
புது வடிவமெடுத்து (கிரீஸ் மனிதன்)
அரங்கேறிக்கொண்டிருக்கிறது
அனியாயமாக.....

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...