அவள்
மெல்லிய புங்காற்று - அவளோ
நடந்து வருவதைக் கண்டு
அண்னம் வெட்கித் தலைகுனிந்தது
நச்சத்திரங்கள்
ஒன்றையொன்று
முட்டி மோதி
காணாமல் போனது
அவள் சிரித்ததைக் கண்டு
மயில்கள்
தன் தோகைகளை
அவளின் காலடியில்
சமர்ப்பித்தது
அவளின் கூந்தல்
அசைந்தாடுவதைக் கண்டு
குயில்கள்
மௌனித்து ஊமையானது
அவள் பேசுவதைக்கேட்டு
மின்மினிகள்
தன்னொலி இழந்து
தத்தளித்தது
அவள் சிமிட்டிய கண்பார்த்து
மொத்தமும் வென்று
சத்தமின்றி இருப்பாள்
என்னவள்
நல்லா இருக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in