பாவையே நீ வீசிய பார்வை
என் மனதில் விழுந்து கனக்கிறது
அது முள்ளாகவும் மாறி குத்துகிறது
நீ வந்த வழி சென்ற வழிகளில்
என் மனம் எதையோ தேடுகிறது
என் விழிகளும் அதில் விழுந்து தவிக்கிறது
உன்னைப்பற்றிய சிந்தனையில் -என்
உள்ளம் உடைந்து தவிக்கிறேன்
உணர்ந்து கொள் பெண்னே...
ஒரு காலத்தில் நான் நானாகயிருந்தேன்
உன்னைக்கண்ட நேரத்திலிருந்து
என்னை நான் தேடியலைகிறேன்
என் பூப் போன்ற இதயத்தில்
நீ பூ(க்)கம்பமாயிருக்கிறாய்
என் நிலையறிந்து நீயாக இறங்கிவிடு
என் இதயத்தில் வலிக்கிறது
உன் உதடுகளை அசையவிடு
ஏதுமில்லையெனில் இல்லையென்றுவிடு
அதை மறக்க முடியாவிடினும்
காலத்தால் மனம் அமைதி பெறும்
வலிகள் நிறைந்த நிகழ்வுகளாக இருந்தாலும்
நிஜத்தில் இதயமேனோ இதமாகவுள்ளது
இத்தனையையும் நான் சுமப்பதால்
என் உள்ளமேனோ சுகப்படுகிறது
இது போதுமென்று உள்ளம் சாந்தியடைகிறது
பெண்னே......!
சுகமாய்த் துடிக்க வைக்கும் சுகம்
உன்னிலிருந்துதான் பெற்றேன் அதனால்
நாளெல்லாம் நன்றியாயிருப்பேன் உனக்கு
அன்புடன் பாயிஸ்
No comments:
Post a Comment