Thursday, August 25, 2011

விபச்சாரம்




நான்கு சுவர்களுக்குள்
நாள் நட்சத்திரம் பார்த்து
நல்லவர்களின் ஆசி பெற்று
நல்ழொழுக்கத்தோடும்
புரிந்துணர்வோடும்
நடந்தேறரும் உறவு
தாம்பத்தியம்

ஆனால் இன்று

வந்தாரை வரவேற்று
விருந்தோம்பல்
உணவாக அல்லாமல்
உடம்பாக அளித்து
ஊதியம் பெறும் காலமிது

மணந்தவளை மறந்து
மாற்றாளை நினைத்து
மகிழ்வுறும் வேட்டையர்களை
என்னபெயர் கொண்டழைப்பது

அசிங்கம் என்று தெரிந்தே
அவசியமானது ஏன்

பணமா அல்லது சுகமா
”இரண்டுமே”
சுகத்துக்கு காமக்கயவர்கள்
பணத்துக்கு விலைமாதுகள்

யாரைக் குற்றம் சொல்வது
தன்னை அடகு வைத்து
அழகு பார்க்கும்
அவளைச் சொல்வதா

தன் இச்சையை
தனித்துக் கொள்ள
நாடி வரும் இவனைச் சொல்வதா

இது ஒழிய வேண்டுமென்பது
வெறும் பகல் கனவே ஆனால்
இது ஓங்கியே செல்லுமென்பது
தொடர் கதையே

புனிதங்கள் புதைக்கப்பட்டு
புதுமைகள் மேலோங்கி விட்டன

மானத்தைப் பார்க்காது
சுகத்தை மட்டும் பார்க்கும்
இம்மானிட சமுதாயம்
இருக்கும் வரை
இருந்து கொண்டே இருககும்......

ஆக்கியோன் பாயிஸ்






No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...