Thursday, August 25, 2011

கிராமத்து ஏழை



அழகோ அழகு
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை - அதனுள்
பட்சிகளின் கொண்டாட்டம்
பார்க்கப்
பரவசமாய் இருக்கும்

அதுவோ!
ஒரு பழைய கிராமம்
ஊர் நடுவே
ஒரு குடிசை

ஒத்தியில் வாழ்ந்தாலும்
ஒத்துப்போகவே
நிரந்தரமானது - அந்த
குடிசை வாழ்கை

ஒரு நாள் புசித்து
மறு நாள் பசித்து
வாழும் வாழ்க்கை
நிழலாய்த் தொடர்ந்தது

பார்க்கவோ பரிதாபம்
சொத்து, செல்வமோ
வெறும் பஞ்சம்தான்

கை கொடுப்பாரில்லை
மடியிலும் கனமில்லை
வெல்லமுடியாத
போர்க்களமாய் இவனின் வாழ்க்கை

காலம்
கைகூடவில்லை
காத்திருந்த நாட்கள்
வெறும்
கானல் நீராயின

இருந்ததும் இழந்து
ஒதுக்கப்பட்டான்
ஒரு மரத்தடியில் - அது
காலம் கொடுத்த
கைம்பேரியம்

இன்றோ - அவன்
நாலு பேரால் சுமக்கப்பட்டு
நாற்பது பேர் பின் செலவதைக் - காண
கண்கள் குளமாகிறது

”எங்கே சென்றார்கள் இவர்கள்”
அவன்
வாழ வளியின்றி
வாழ்ந்த போது

ஆனால்
அந்த கிராமத்து மரம் மட்டும்
ஆடி அசைந்து கொணடே இருக்கிறது
அவனின் நினைவுகளோடு

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...