Wednesday, August 24, 2011

காதலால்

நேற்று வரை
நாலும் அறிந்தவன்

இன்று
தான் யாரென்று
அறிந்து கொள்ள முடியாமல்
அலைந்து திரிகிறான்

அன்றோ!
மரியாதைக்காய்
மாலை தூவி
மகிழ்வித்தவர்கள்
இன்றோ!
கல்லாலடித்து
காயப்படுத்துகின்றனர்

இத்தனைக்கும்
இவன் யார்?

மனதாற நேசித்தவள்
மணந்து கொண்டாள்
மாமன் பையனை
மனமுடைந்து போனான்
மறக்க முடியாமல்

காதல்
கற்றுக்கொடுத்ததை
கடைபிடித்துக் கொண்டிருக்கிறான்
மாணவன் என்ற பெயரை
மாற்றிக் கொண்டு

தவிப்பே துணையானது
இரவு,பகல் ஒன்றானது
உறைவிடம் சாக்கடையானது

இனி!
காலம்தான் சொல்லவேண்டும்
காதல் கற்றுக் கொடுத்ததை

ஆதலால்
காதலை கற்று மற
கடைசியில் கலங்கி நிற்காதே
காதலால்தான் என்று

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...