மொழிகளை ஊமையாக்கி
நீ மௌனித்திருக்கிறாய்
அந்த மௌனமே
சுட்டெரிக்கும் றவையாய்
என் நெஞ்சை
துளைத்துச் செல்கிறது
சத்தமில்லாத
பாசை கூடவா
உன்னிடம்
ஊணமாகிவிட்டது..?
இப்போதுதான் புரிகிறது
நீ மௌனிப்பதே
என்னைக் கல்லறையில்
காண்பதற்கென்றே..
அப்படியே நான்
மண்ணறையானாலும்
மனம் என்னவோ
வெளியேதான் உள்ளது
அப்போதாவது
ஓரிரு வார்த்தைகளை
பேசி விட்டுச்செல்
சமாதியாவது
சாந்தியாகட்டும்
ம்..கவிதை சோகத்தை தாங்கி வந்திருக்கிறது..சிறப்பு வாழ்த்துகள்..
ReplyDelete