கடல் நீரைக்கிழித்து
ஆதவன் எழும்போது
படபடவென சிறகுகளை விரித்து
கூடு கலைக்கும் பறவைகள்
தழும்புகின்ற கடல் நீரில்
வெளிக்கின்ற செவ்வாணம்
துடிக்கின்ற ஒரு அழகிய ஓவியம்
கறைகளை முத்தமிடுகின்ற
அலைகளென்றும் அந்த அலைகளை
வெல்லுகின்ற படகுகளென்றும்
அந்தப்படகுகளைப் படம்பிடிக்கும்
நீரலைகளென்றும் பரவசக்காட்சி
எங்கும் படர்ந்து கிடக்கும்
துருதுருவென தரதரவென்று
தறையை வாரிக்கொண்டு
மாயமாய் மறைந்து விடும் நண்டுகள்
ஆகாயத்தில் கூந்தலை விரித்து
ஒன்றோடு ஒன்று கதைபேசி
இனிக்கும் இசையாய்
காதுகளையும் குளிரவைக்கும்
தென்னையின் ஓலைகள்
கொஞ்சம் அப்படியே
மேற்கே திரும்புகிறேன்
பூமி பச்சிலையால் மூடப்பட்டு
அங்கேயும் அலையாய்
ஆடியசைந்து தவழ்கிறது...
சலசலவென ஓடும் நீரோடை
அதைப் பருகிக்கொள்ளும்
வேளாமைகள் - அதில்
தூங்கிய பனித்துளிகள்
என்னிதயத்தை நனைத்துவிடுகிறது
முட்டியால் தலைசெய்து
காய்ந்த வைக்கோலால்
உடல் அமைத்து
ஒட்டுத்துணியால் அலங்கரித்து
வயளை காத்து நிற்கும்
அழகான காட்டுபொம்மை
நான்கைந்து ஓலைகளால்
கூறையமைத்து
வலைந்து நெழிந்த கம்புகளால்
தூண்கள் அமைத்து
ஒற்றை விளக்குடன்
ஒலி வீசி்க்கொண்டிருக்கும்
அற்புதமான பரன்கள்
ஆங்காங்கே மலைப்பபூண்டுகள்
அதன் நடுவே மறைந்து செல்லும்
இறவின் எதிரி கதிரவனோடு
முகிலினங்களை விலக்கி
சந்திரனின் வருகை
அது வாணத்தின் முற்றுப்புள்ளி
அதைச் சுற்றி கமாப்புள்ளியாய்
தொடர்ந்து செல்லும் நச்சத்திரங்கள்
நிலவோடு போட்டிபோட்டு
முன்னும் பின்னுமாய்
படர்ந்து வரும் மேகக்கூட்டங்கள்
என் இமைகளையும் மெதுவாய்
தடவிச்செல்ல மூடிய விழிகளோடு
நானும் உறங்கிப்போனேன்
No comments:
Post a Comment