உன்னைக் கண்டபின்
காலங்களை
நேசிக்களானேன்
சிறகுகளின்றி
விண்னைத்
தொட்டு வந்தேன்
நீ இல்லாதிருந்த
நிமிடங்களை
வெறுத்திருந்தேன்
உன்னோடிருந்த
நிமிடங்களை
ரசித்திருந்தேன்
ஒவ்வொரு வினாடியும்
ஒரு விழாக்கோலமாய்க்
கழிந்து கொண்டது
காதல் கனிய
மணப்பந்தல்
அலங்காரமிட்டது
ஓரிரு வருடங்கள்
ஓஹோன்னு சென்றது
விதி செய்த விளையாட்டு
கடல் கடந்து
தறையில் நீந்துகிறேன்
இளமையின் ஏக்கங்கள்
இலைமறை காயாய்
அழுகிவிடுகிறது
ஆசையும் அரவணைப்பும்
அருந்து விழும்
தொலை நாடாவில்
பரிமாறப்படுகிறது
இளமையின் துடிப்புகளோடு
உறங்கிவிடும் உணர்வுகள்
எண்ணிலடங்காது
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமாகிறது
ஓயாத அலையாய்
முறிந்து விழும்
இன்ப நினைவுகள்
எனதுணர்வுகளை
நனைத்து விடுகிறது
இரவோடு போரடி
அதன் மடியில் தலைசாய்த்து
விழிகளை மூடுவதற்குள்
காலைப்பொழுது
விழித்துக்கொள்கிறது
நாட்களோடு போராட்டம்
நகராத நிமிடங்களென்று
நரகமாகிறது வாழ்கை...
No comments:
Post a Comment