நெஞ்சை வருடும்
பசுமையான நினைவுகள்
எம் பள்ளிக்கூடக் நாட்களே
அதில் பகிர்ந்து கொண்ட
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு கதை சொல்லும்
அரிவரியில்
கால்த்தடம் பதித்த
முதாலாவது கலைக்கூடம்
எம் பள்ளிக்கூடம்
அறியாமையை
அடியோடு கிள்ளியெரியும்
அன்பு ஆசான்கள்
பள்ளிப்பருவத்தில்
நட்பை பகிர்ந்து கொண்ட
பள்ளி நண்பர்கள்
பக்கத்து பக்கத்து மேசையில்
பாசத்தைப் பரிமாரிக்கொண்டே
பகிர்ந்து கொண்ட பாடங்கள்
யாருமே இல்லாத நேரம்
வகுப்பறையை இரண்டாக
புறட்டிப்போட்ட காலங்கள்
கூடி நின்று
அறட்டையடிக்க
நிழல்தரும் மரங்கள்
கொஞ்ச நேரத்துக்குள்
கொள்ளை ஆசையாய்
விளையாடி மகிழ்ந்த
விளையாட்டுக்கள்
யாரும் இல்லாத இடங்களில்
மனதுக்கு பிடித்தவளுடன்
நெஞ்சு படபடக்க
கதைத்து நின்ற நிமிடங்கள்
பரிட்சை நேரத்தில்
விழுந்து விழுந்து பாடங்களை
மீட்டிக்கொண்ட நாட்கள்
தேர்வின் முடிவுகளை
கையில் வாங்கி
உறைந்து போன நாட்கள்
பிரிவு என்பது
தவிர்க்க முடியாது என்பதை
உணர்த்திய விடுகை விழா
எல்லாம் நடந்து
எல்லோரும் பிரிந்து
எங்கங்கோ இருந்தாலும்
உள்ளம் பரவசத்தால்
பாய்ந்து பற்றிக்கொள்ளும்
பள்ளி நினைவுகள்
என்றுமே மாறாது மாறாது
No comments:
Post a Comment