சில்லென்ற காற்று மெதுவாக
மேனியை தடவிச் செல்லும்போது
பனிமூட்டத்தினுல் இருந்து
என் தேவதையே என்னைத்
தொடுவதாய் உணர்கிறேன்
தொடாமல் முத்தங்களென்றும்
பார்க்காமலேயே பாசாங்குகளென்றும்
உன் நினைவுகளின் ஒரு பகுதியாய்
தொடராய் தொடர்ந்து செல்கிறது
உரசல்கள் இல்லாத உணர்வுகளும்
தீண்டலகள் இல்லாத தித்திப்புகளும்
நீ விலகி இருக்கையிலையே
அவைகளை அனுபவிக்க முடிகிறது
உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது
உறக்கத்தின் ஆறம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்
ஆனால் உன்னுடனான
ஊடல்களின் நினைவுகளில்
உணர்ச்சிகள் ஏனோ கிழர்ச்சியாகிறது
No comments:
Post a Comment