Wednesday, November 9, 2011

நான் தூங்க மறந்த உறக்கம்



கடலலை உரசும் கரையோரம்
என்னினைவுகள் தேங்கி நிற்க
கடலில் பட்டு வரும் காற்றும்
அவள் நினைவுள் தீண்டும் நேரமும்
ஒன்றாகிடவே கடல் மணல்
அவள் மடியாகிறது தேகமதில் சாய்ந்திட

அமைதியாய் ஒரு உறக்கம்
வானம் பார்த்த கண்கள்
வட்ட நிலா காண்கையில்
தேடிச்சென்றன அவள் நினைவுகளை

வானில் ஊர்ந்த மேகங்கள்
என் உறக்கத்தை கலைத்தது
ஊர்ந்த அவள் நினைவுகளோடு

மின்மினித்தோரணங்கள்
அவளின் தேகத்தின் மச்சங்கள்
கிள்ளிப்பார்க்க நீண்ட கைகள்
திரும்பி விட்டன
கலைந்த கனவுகளோடு

விழித்துப்பார்க்கிறேன்
கடல் நீரைக்கிழித்து
கதிரவன் காட்சி
கண்கள் வசப்பட
கலைந்தது உறக்கம்.......

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...