வருகின்ற ஈதுல் அல்ஹாவே
இருதயம் கொண்டு
இன்பமாய் அழைக்கிறோம்
வாரீர் நீர் வாரீர்
எம் விழிகள் திறந்தேயிருக்கிறது
உன் சந்தோச வருகையால்
நிறம்பிடவே அது காத்திருக்கிறது
தரத்தால் மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும்
எல்லோர் மனதிலும்
ஒரே நிலையாய் படர்ந்திடுவாயே
பன்பான அல்ஹாவே நீர் வாரீர்
புத்தாடை புதுமணம்
ஏழை எழியோருக்கு அது
ஒரு நாளில் கிடைக்கும்
இன்ப வெகுமதி நீர் வாரீர்
சந்தோசம் உன்நாளில்
கொட்டிக்கிடக்கிறது
பகிர்ந்தெடுக்க நாங்கள்
காத்திருக்கிறோம் வாரீர் நீர் வாரீர்
பத்து ரூபாய்
பங்கிட்டு கொடுக்கையில்
பரவசமாய் இன்று நான்
”எஜமானேன்” ஏழை மனதில்
இனிப்பாய் ஒரு தூண்டல்
உறவுகளால் வீடு
முழுக்க இன்பம்
வீதிகளில் பட்டாசுச்சத்தம்
அனுபவிக்க ஆசை ஏங்குது
வாரீர் நீர் வாரீர்
புதிதாய் ஒரு பார்வை
உச்சி மோர்ந்து ஒரு முத்தம்
ஆறத்தழுவிய அணைப்பு அது
பெற்றோரின் பாசம்
அளவிழந்து காணப்படும் அன்று
வாரீர் நீர் வாரீர்
இதையெல்லாம் அனுபவிக்க
நாங்களும் ஆசை கொள்கிறோம்
கடல் மட்டுமே எங்களுக்கு
தடையாய் இருக்கிறது
கடல் கடந்து ஒரு நேசன்
உன் வருகைக்காய் காத்திருக்கிறான்
உன்னில் அனுபவிக்க
எத்தனை எத்தனை இருக்கிறது
வாரீர் நீர் வாரீர்
அன்போடு பாயிஸ்
No comments:
Post a Comment