மழை வரும் அறிவுருத்தலை
மேகங்கள் அணிவகுத்து
கொண்டுவருதலில் சொல்லும்
காற்றலைகள் குழலூதி
வரவேற்கும், மின்னொளிகள்
வாணவெடிகளிட்டு வரவேற்கும்
வாணம் மேளதாளமிட்டு
வரவேற்கும், இயற்கை
ஆடி அசைந்து வரவேற்கும்
மனிதனோ வேறுபடுவான்
சிரித்து விளையாட சிறுவன்
புன்னகைத்து வரவேற்பான்
ஒரு போர்வைக்குள் ஒழிந்து கொள்ள
பலர் வாவென்று வரவேற்பர்
தினாந்த கூலி மட்டும் சிரித்தபடியே
வந்திட்டியா வாவென்று அழைப்பான்
உன்னால் ஆனந்தம் அதிகம்
அதைவிட அழிவுகளும் அதிகம்
ஆகவேதான் எப்பவும் போல்
அவ்வப்போது வந்து மறைகிறாயோ...?
ஐம்புதங்களின் ஆட்டத்ததை
அணைய வைக்கும் தன்மையும்
ஆனந்தப்படுத்தி அழவைகும்
அதிசிய தன்மையும் உன்னிடமே...
எமது வலை தளத்திலும், ஜி + லும் இணைத்துள்ளேன் தோழா! பாராட்டுக்கள்.
ReplyDelete