வறண்ட பாலை நிலம்
இருண்ட என்னிதயம்
மேகமதை தாண்டிடவே
மின்னலோடு தூறல்
இதயத்தில் பனித்தூறல்
மின்னலொலிக்கதிரில்
துளிகள் பட்டுத்தெரிக்கும்
பிரகாசக் காட்ச்சி என்னிதயத்தில்
இதயபூமி பதமாயிருக்கிறது
காதல் விதை கொண்டு வா
அது வளர உரம் என்னிடமிருக்கிறது
மேகமே நீ சிரித்து மறைகிறாய்
என்னிதயமோ உன்னைத்
தேடி வருகிறது - உன்னால்
என் ஜீவன் வாழவேண்டுமென்று
மேகமே உன்னைத்
தொடரும் என்னிதயத்தை
ஆகாயத்தில் தொங்க விடாதே..
அடை மழை வேண்டாம்
அவ்வப்போது தூறல் விடு
அமைதியாய் வாழ்ந்திடும்
என் இதயம்
இடைவெளிகளோடு இருந்த
என்னிதயம் நெருக்கமாகிவிட்டது
மேகமே நீ சூழ்ந்து கொண்டதால்
மேகமே நீ கலைந்து விடாதே
என்னிதயத்தில் தூறல் நின்று விடும்
தூறலே நீ நின்று விட்டால்
என்னிதயத் துடிப்பே அடங்கிவிடும்
அன்போடு பாயிஸ்
No comments:
Post a Comment