Thursday, September 29, 2011

என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்

என்னோடு வந்த நாட்கள்
என்னைக்கடந்து விட்டது
காணவே முடியாத தூரத்தில்

அந்த வழிப்பாதையில் - நான்
பெற்றுக்கொண்ட அனுபவம்
இன்று வரை மனதோடு வாழ்கிறது

காலம் தந்த அருமையான நினைவுகள்
நெஞசை விட்டும் மாறுமுன்னே
அழகான அந்த நாட்கள் - என்
மனதை இன்னும் உரசுதே....

நான் கடந்து வந்த பாதையில்
அகலாத சில நாட்கள்
இன்னும் மனதோடு நிற்கிறது

கனவுகளோடும் ஆசைகளோடும்
உல்லாசமாய்ப் பறந்த நாட்கள்
பலனுகள் ஏதுமின்றியே கழிந்தன

வறுமையின் பிடியில் சிக்கி
வாழ வழியின்றி
வதைந்து போன சில நாட்கள்

கையில் உரமின்றி
ஊதியம் தேடியலைந்த நாட்கள்
உள்ளத்தில் உறைந்து கிடக்கிறது

காலம் தந்த உத்வேகத்தில்
கடல் கடந்து வாழ்கிறேன்
இன்றைய பொழுதிலும் கூட

உறவுகளுக்காய் உழைத்து
சுமத்தப்பட்ட சுமைகள்
சுகமாக இறக்கப்பட்டு சுகன்கண்ட நாட்கள்

இங்கும் காலம் மாறவில்லை
சுழற்சி வாழ்கை
சுழன்று கொண்டேயிருக்கிறது

அலாரத்தின் சத்தம்கேட்டு
எரிச்சலோடு கழிந்து கொண்டிருக்கிறது
எண்ணிக்கையில்லாத இந்த நாட்கள்

ஒரு விடியலை நோக்கிய
ஒளிமயமான காலத்தை - என்
கால்கள் தேடி நடக்கின்றன
காலம் வழி திறந்தால் - என்
கால்கள் நுழைந்து கொள்ளும் ஒரு பொழுதில்

இடையே சில நாட்களுக்கான விடுமுறையில்
கடலலைபோன்ற என்னங்களோடு
பறந்து சென்றேன் - என்
பாச நண்பர்களையும் உறவுககையும் காண

அங்கே எல்லாமே என்னைவிட்டும்
ஒரு தூரத்து முற்றுப்புள்ளியானதை
என் மனம் தாங்க மறுத்த காலம்
இன்னும் உள்ளத்தடியில் வேரூண்டிருக்கிறது

என்னைக்கடந்து சென்ற காலம்
என்னை மீட்கவருமா என்ற
ஏக்கங்களோடு நாட்களை நான்
எண்ணிக்கொண்டே இருப்பேன்...

அன்புடன் பாயிஸ்

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...