உன்னுள்ளே புதைந்து கிடக்கிறது
உன் ஆற்றல்மிகு திறமைகள் - அதை
உயரக்கொண்டு வா - நாளை
உயிர்ப்பித்தெழும் உனக்கென்றொரு வரலாறு
உன் போர்வையை அகற்றி
சோம்பளை சாம்பளாக்கி
இன்றே எழுந்து வா - நீ
செல்லவேண்டிய பாதை திறந்தேயிருக்கிறது
நீ செல்லும் பாதை தடைகளானாலும்
நீயொரு தனிப்படையாக தயக்கமற்று
தடைகளை தாண்டிச்செல் - நாளை
தரணியாவும் உன்கையிலாகும்
அப்படியே நீ சோர்ந்து போனாலும்
நீ இழந்நவைகளை நினைத்துதப்பார்!
உன் உறவுகளை மனதில் நிருத்திப்பார்
முடங்கிப்போன உணர்வுகள் கர்ச்சித்தெழும்
உன் சினம் அடங்குமுன்
சுதாகரித்துக் கொள்!
சுற்றிவரும் சூழ்ச்சிகளை
சுக்கு நூறாக்கிவிடு
உன் உறவுகள் விலாசமிழந்து
வீதிகளில் வீசப்படுகிறார்கள்!
அவர்களுக்கு இன்னொரு முகவரியிடு
பிந்திவரும் நாட்களில் - நீ
செல்லும் இடமெல்லாம் முகவரியாவாய்
ஒரே நிலை நிரந்தரமானதல்ல
மாற்றங்கள் நிகழத்தான் வேண்டும்
முயன்று பார் மனிதா
இழப்புகளை தாண்டிடுவாய்
பிந்திவரும் உன்சமுதாயம்
பிரச்சினைகளேயற்ற ஒரு வாழ்வில்
பிரவேசமாவார்கள்
நீயொரு தனிப்படையாய்
தடைகள் தாண்டிச்செல்
நாளை உன் சரித்திரம்
புத்தகங்களாக மாரும்
அதை படிக்கும் போது - உன்
இரத்தம் சிந்திய பக்கங்கள்
சான்று பகரும் நீயொரு
சரித்திர நாயகனென்று!
No comments:
Post a Comment