Thursday, September 15, 2011

பதுங்கும் வரையில்தான் பூனை

அரக்கன் ஓருவன்
அரசனானான் அவனின்
ஆளுகைக்குள் ஆண்டிகளானோம்
அப்பாவிகளான நாங்கள்


அடக்குமுறையாணவத்தால்
வஞ்சக நெஞ்சமிட்டு எங்களை
வதைக்கும் இந்த சீடர்களின்
மனிதமேயற்ற அக்கிரமச்செயல்
அழியும் நாள் தொலைவிலில்லை

இங்கே மனிதர்கள் விறகுகளாக
வெந்து வெம்பிக்கொண்டிருக்கின்றனர்
அணுவளவும் அக்கறையில்லாத
அயோக்கியவான்கள் கைதட்டி
உள்ளம் குளிர்கின்றனர்

நாங்கள் குறைவானவர்கள்தான்
குணம் குன்றாத நல்லவர்கள்
நீங்களோ அதிகபட்சம்தான்
குணமேயில்லாத சூனியக்காரர்கள்

ஓலைக்குடிசை தான் நாங்கள்
மாடமாளிகை நீங்கள்
போட்டிபோட நாங்கள் நாதியற்றவர்கள்தான்
போதும் எங்களை விட்டுவிடுங்கள்

எங்களை நீங்கள் எரித்தாலும்
நாங்கள் கருகிடுவதாய் இல்லை
போதும் எங்களை விட்டுவிடுங்கள்

எங்கள் பொறுமைகள்
பூட்டப்பட்டவரையிலும்
பாக்கியவான்களே நீங்கள்

அநியாயம் அத்துமீறும் போது
அங்கவீனர்களும்
ஆவசமாய் எழுவர்

அப்போது கைதட்டி
நாங்களும் உள்ளம் குளிர்வோம்
சிதைந்து போன உங்கள்
சடலங்களைப்பார்த்து

இவைகள் வேண்டாமென்றால்
எங்களை விட்டுவிடுங்கள்
நாங்கள் விலகியே இருக்கிறோம்

அன்புடன் பாயிஸ்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...