Tuesday, September 13, 2011

முழுமதியாய் முகம்மது நபி (ஸல்)

தாய் தந்தையிழந்து
தாத்தாவின் வளர்ப்பில்
மக்கத்துபுழுதியில்
மாமனிதம்மொன்று புலர்ந்தது
இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்

மந்தைகள் மேய்த்தாலும்
“மதி” தெழிந்த தண்ணீரைவிட
தெளிவான போக்கிலிருந்தது

உண்மையின் உறைவிடம்
முன்னாங்கே வயதேயுடைய
முஹம்மதிடம்தானிருக்கிறது என்று
எதிரிகளாலேயே
முத்திரையிடப்பட்ட முகவரியாளர்

சிலை வணக்கத்திலையே
சிந்தனையை இட்டு சிலைக்கு
சிரந்தாழ்ந்த மனிதர்களுக்கு மத்தியில்
உண்மையை உரைக்க
உலகஏகனால் அங்கீகாரம் பெற்ற
வழிகாட்டியானார் எம்பெருமானார்

உண்மையை உரைத்த போது
சோதனைகளும் வேதனைகளும்
உதையடிகளும்தான் மிஞ்சியிருந்தன
மனம்சலிக்கவுமில்லை
உடல் சோர்ந்து போகவுமில்லை
சாதனைகளே பிரதிபலிப்பானது


எதிரிகளின் படைப்பலமும், ஆயுதப்பலமும்
அண்னலாரின்
நெஞ்சுரமிக்க மனபலத்திற்க்கு முன்
நொறுங்கிப்போயின

தியாகங்கள் வெண்று
உண்மையின் சாம்ராஜ்ஜியம்
உதயம் கண்டு அதன் ஒலி
உலகமெங்கும் பரவியது

இன்று அதன் ஒலி
விண்வெளியிலும் தெரிகிறது
உண்மைக்கு அழிவில்லையென்பதற்கு
உகந்த உதாரணம் இதுவே

பொய்மை அழிக்கப்படுவது நியதிதான்
உண்மை உதயமானதிலிருந்து
இன்னும் விருட்சமாகிக்கொண்டே செல்கிறது
1400 வருடங்களையும் தாண்டி

தியாகத்தால் சிந்திய இரத்தங்கள்
காய்து போயிருக்கலாம்
நீங்கள் வளர்த்த சகோதரத்துவம்
இன்னும் ஈரமாகவேயிருக்கிறது

சாந்தி, சகோதரத்துவத்தை
சாமத்தியமாக சாதித்து எம்
சந்ததிக்கு சமர்ப்பணம் செய்த சாதனை இன்னும்
சாண்று பயிண்றுகொண்டேயிருக்கிறது

சத்தியம் அசத்தியம்
எதுவென்று நாங்கள் அறிய
நீங்கள் இழந்து பெற்றுத்தந்தவை இன்னும்
சத்தியமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது
சத்தியம் என்றும் அழிவதில்லை.

அன்புடன் பாயிஸ்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...