மொத்த அழகையும்
ஒற்றையழாகாய்
பிரம்மன் செய்த கலையே
பித்துப்பிடித்து
பின்னே அலைகிறேன்
இதோ
என் காதல் காவியத்தின்
சிறு ஓலைத் துண்டு
அலட்சியமாய் வீசிச்செல்லாதே
அளவு கடந்த அன்பு
அதில் தங்கி உள்ளது
எனக்காய் அற்ப நேரமெடு
உனக்காய் விழுந்துகொண்டிருக்கும்
என் உயிரின் நிலையை
இந்த ஓலைகள் உணர்த்தும்
உந்தன் நினைவுகளே
என் ஜீவனின் உயிரோட்டமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
அந்த நினைவுகளே இன்று
எந்தன் ஜீவராகமாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
என் ராகத்தை வெருக்காதே
அதை விரும்பிச் செவிமடு
அதில் என்னைக்காண்பாய்
இப்போது நீ என்னை
வெறுத்தாலும்
தேடிவரும் காலம்
வெகு தொலைவிலில்லை
அப்போது
என் மடை தாண்டிய கண்ணீர்
தரை சேரும் முன்னே
உன் கைகொண்டு
தாங்கிடுவாய் பெண்ணே
காலம் கடந்த கருணை
பயனற்றுப் போயிற்று
விதி அரங்கேற்றியதை அறியாமல்
நீ தேடிவந்த காதலை
நானின்று தொலைத்து நிற்கிறேன்
காதல் தந்த பரிசியது
கலங்கிப்போன இதயமென்று
நொந்து போனது உள்ளமென்று
மங்கிப்போனது மதியென்று
தன்னையே இழந்து நிற்கிறேன்
No comments:
Post a Comment