Thursday, February 23, 2012

ஈழக் கிழவனின் முணுகள்


வாணமிடும் கண்ணீரை
உள்ளே அழைக்கும்
சிறு ஓலைக்குடிசை

சின்னஞ்சிறு பருவம்
சினுங்களிடும் பசி
வரவு தேடி அப்பன்
அப்பன் வரவு காத்து தாய்

உலையில் இட்ட அரிசி
உப்புக்குச் சொந்தமில்லை
உறக்கப்பத்திய நெருப்பு
உண்ணும் பதத்தில் அன்னம்

உருட்டிப்பிடிச்ச சோறு
ஊட்டிவிட்ட கரங்கள்
கால் மடித்தொட்டில்
கலங்கமில்லா தாலாட்டு

விழி மூடிக்கொள்ள
அமைதிகாத்த இரவு
அரசன் வாழ்கைதான்
பிஞ்சு வயதனில்

கோன் வாழ்கை கோணிப்போய்
கூனி வாழும்போது
நிம்மதி தேடியழைகிறேன்

ஓலைக்குடிசையிலும்
நிலாச்சோற்றிலும்
கோடி இன்பங்கள்
கொட்டிக்கிடந்ததாய்
ஒருகாலம் இருந்தது.....

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...