தனி வெள்ளைக் காகிதமாய்
என்னிதயம் எதுவும்
எழுதப்படாமலேயே இருந்தது
அதில் நீ வந்து
என்னுயிராய் உன்னை
உயில் எழுதிச் சென்றாய்
அதைப்படிக்க படிக்க
இன்பம் சுரந்து வந்தது
உலகம் மறந்து போனது
சுவர் ஓவியமாய் என்னுள்ளத்தில்
அறையப்பட்ட உன் நிலாமுகம்
பிரகாசமாய் ஜொளிக்கிறது
“காதல்” காதல்தான் - அது
உனக்குப் புரிகிறதோ என்னவோ
இப்போதல்லாம் உன்னைப்பற்றி
கவிதை எழுத நினைக்கிறேன்
அப்போது உனது பெயரையே
பக்கம்பக்கமாய் எழுதிவிடுகிறேன்
உன்முகம் தந்த பரிசு
என் அகத்தில் வலிக்கிறது
அது சுகமாய் இருந்தாலும்
மனதை இருகக் கட்டி
கொலை செய்கிறது
சுடுமணலில் துடிக்கும் புழுகூட
சுகங்கண்டு விடும்
உள்ளிருந்து பதறும் இதயம்
என்னவென்று சொல்வது
இருளோடு அழும் இதயம்
உதிக்காமலேயே
அஸ்த்தமனம் ஆகிடுமோ..?
அகத்தின் வலி ரசிக்கும்படிதான் இருந்தது..எழுத்துப்பிழைகளை சரி செய்யவும்.
ReplyDelete