Tuesday, October 18, 2011

உனக்கு நிரந்தரமென்ன..?

ஆடும் வரை ஆடி
மனிதன் அடங்கி விடும் நேரம்
நிச்சயிக்கப்பட்டவொன்று

நல்லறங்கள் செய்து
நாலுபேர் தேடி வை
நாளை உன்னை தூக்கிச்செல்வர்

வாழும் போதே வாழ்(கையை)ந்து விடு
வல்லோன் உன்னை
வாவென்று அழைக்குமுன்

தயக்கமின்றி தனிப்பயணம் செல்ல
தடைகள் ஏதுமில்லாதவாரு
தயார் செய்து வை உன்பாதையை

சொத்துச்செல்வம் செல்லாது
சேர்த்து வைத்த நற்காரியம்
சேர்ந்தே வரும் மருமைவரை

உனது நிரந்தர சொத்து - நீ
நிரந்தரமாய் உறங்கி விடும்
அந்த ஆறடி நிலமே

எம்மனிதன் எம்பேரானாலும்
அவன் அடங்கி ஒடுங்கிவிடுமிடம்
ஆழ்குழி ஆறடி நீளமே

மனிதா உன்னை மறந்து நீ வாழாதே
வாழும் போதே நீயாரென்றரிந்து வாழ்திடு
ஈருலக வாழ்கையிலும் ஜெயமுனக்கே..

அன்புடன் பாயிஸ்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...