உன் கூர்மைப் பார்வையில்
என்னிதயத்தைக் கீரியவளே
அது சுகப்படவும்
வழியைச்சொல்லிவிடு
அந்நொடிப் பார்வையில்
சிறகடித்து பறக்குது மனசு - அது
சேரவழியின்றியும் தவிக்குது - உன்
இதயவறையை திறந்து கொடு - அது
சேருமிடமும் அங்கேதான்......
அந்த நொடிப் பார்வையால்
இன்னிதயத் தவிப்பை ஏதோவொரு
இதமான அலைவரிசை
அசைபோட்டுக்கொண்டேயிருக்கிறது
நேரத்தில் நொடிகள் பிந்தினாலும்
பிந்திய அந்நொடிக்குள்ளும்
உன்னை நினைக்க - என்
மனம் மறப்பதில்லை
வாழ்கின்ற ஒவ்வொரு நொடிகளும்
என்னிதயத்தை நசுக்குதே
நான் இப்போதெல்லாம் நேசிப்பது
அந்தவொரு நொடிப்பொழுதையே...
உனக்கென்ன - நீ
எய்த அந்தவொரு பார்வை
என்நெஞ்சையல்லவா
குத்திக்குடைகிறது
பெண்ணே!
எனக்காய் ஒரு நிமிடமெடு!
உனக்காய் வாழும்
என்னையரிந்து கொள்ள!
நானின்று வாழ்கிறேன்
அந்தவொரு நொடியாலையே
பிந்திய பொழுதுகளில் - நான் வாழ
எஞ்சிய நிமிடங்களை
உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்
விடைகொடு!
உன் கண்ணை நீ மறைத்தால்
நீயே மறைந்து விட்டதாய் ஆகுமா...?
No comments:
Post a Comment