தாய்!
எம்மொழி, யாராயினும்
முதல் மொழியும் வார்த்தை
அம்மா
உறவுகளில்
முதன்மையானதும்
மேன்மையானதும்
தாய்
கருவுற்றதிலிருந்து
ஈண்றெடுக்கும் வரை
காலம்
பத்து மாதம்
சொல்வது
சுலபம்
சுமந்தவளைக் கேள்
சொந்தச்சுமை
கனக்கவில்லையென்பாள்
தன் மடி தாங்கி
தாலாட்டுப்பாடி
தட்டிக்கொடுத்து
தான் உறங்கா
தன்னை உறங்க வைப்பாள்
நீ - பசியாற
தன் பசிமறந்து
உதிரத்தையே செலவு செய்வாள்
ஊண் உறக்கமின்றி
உருக்குழைந்து
உன்னை ஒருவனாக்க
உழைத்திருந்தாள்
உன் தாய்
முற்றும் முடிந்து
முதுமையடைந்ததும் - நீ
முப்பதை மிஞ்சி இருப்பாய்
அப்போதும் - நீ
குழந்தையே உன் தாய்ககு
இதுதான்
தாய்
No comments:
Post a Comment