Wednesday, December 21, 2011

மலர்களைத் தாங்கிய முற்கள்

முற்களில் நடக்க முடியுமா
மத்திய கிழக்கு நாடுகளில்
வாழ்ந்துதான் பாருங்களேன்

பார்ப்போர் கண்களுக்கு
மலர்கள் தூவிய பாதையாயிருக்கும்
பாதங்கள் பதிந்தால் உணரும்
மலர்களைத் தாங்கியது முற்களென்று

தடுக்கி விழுந்தால் தாங்கிட
உறவுகள் சூழ்ந்திருக்கும்
அது நம் திரு நாட்டில்
இங்கு சருக்கினால் ஒட்டிய நட்பும்
எட்டிய தூரம் எகிரி ஓடும்

எங்களின் நிழல்கள் தவிர்
நிழல்களேயில்லாத இந்
நீண்ட நிலத்திற்கு இப்பஞ்சைப்
பராரிகளால்தான் அழகே

பாலை வனமானாலும்
நிலம் வறண்டு காண்பதில்லை
காரணம் எங்களின் வியர்வை

பிழிந்தெடுத்த சம்பாத்தியத்தில்
உறவுகள் காண்பது இன்பம்
சம்பாதித்த நாங்களோ காண்பது
வெறும் அற்பமான அவலங்களே

இடையிடையே நாட்டின் நினைவுகள்
ஒரு உலக உருண்டையாய்
உள்ளத்தில் சுழன்று கொண்டேயிருக்கும்
அது எந்நாளும் கிடைத்திட நெஞ்சம் ஏங்கும்


ஆயிரம் கனவுகளும் ஆசைகளும்

ஒன்றுமே நிறைவேறா நிராசையாய்
நாட்கள் நகர்ந்து கொண்டே செல்லும்

தாய் தந்தையரை தவிக்கவைத்து
அன்பு மனைவியரை ஏங்கவைத்து
பிள்ளைகளை பரிதவிக்க வைதது
பரதேசியாய் பரிதாப வாழ்கை

எப்படியிருக்கும் அபிவிருத்தி
இவர்கள் விடுகின்ற கண்ணீரில்தான்
மூழ்கிவிடுகிறதே முன்னேற்றங்கள்

வருடங்கள் ஐந்து ஆறாயினும்
வரட்சியே தொடர்ச்சியாய்
முலமேனும் முன்னேற்றமில்லை
நரக வாழ்கை இது முடியட்டும் எங்களுடன்

அன்புடன் பாயிஸ்

1 comment:

  1. தடுக்கி விழுந்தால் தாங்கிட
    உறவுகள் சூழ்ந்திருக்கும்
    அது நம் திரு நாட்டில்..
    உண்மைதான் தோழர்..வாழ்த்துகள்..

    இறப்பதை எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...