இரு இன ஒழிப்பாளர்களின்
வெறிகொண்ட பாதையில்
ஒரு நீதவானின் பயணம்
பேனா-மை அவர்கள் வசமிருக்க
வெறும்முனையை வைத்து
எப்படித்தான் எழுதப்போகிறார்கள்...?
சுயநலவாதிகளை சூழவைத்து
சுயாதீனத்துக்காய் புறப்பட்டால்
சுயமரியாதை என்னவாவது...?
முட்கள் நட்டப்பட்ட நாற்காலியில்
உங்களை அழைத்து வந்து - அதில்
அமரச் சொல்கிறார்களே...!
நீதிக்கே இந்தஇடர்பாடென்றால்
நிர்க்கதியான எம்மவர்களுக்கு...?
தலைவா உம்பயணத்தின் எல்லை
நெருங்கி வந்துவிட்டது - உம்மை
பின்தொடரும் பயணிகள் நாங்கள்
எமைத் திரும்பிப் பார்க்காமலேயே
உம்பயணம் முடிவடைந்துவிடுமா...?
சிறுபான்மை இனத்தவர்களுக்கும்
பழைய பத்திரிகைகளுக்குமிடையே
ஒரு ஒற்றுமை இருக்கிறது
தேவைகளுக்கேற்ப தூசுகள்தட்டி
அவ்வப்போது வாசிக்கப்படும்
எம்மைக் கசக்கிப்போடும் காலம்
எம்மை நோக்கியே வருகிறது
ஏனின்னும் தயக்கம் கொள்கிறீர்
ஏக இறைவன் எம்மோடில்லையா...?
பொல்லாத உலகமிது..!
மனமாசும், நயவஞ்சகமும்
உள்வாங்கிய மனிதர்களைத்தான்
இச்சமூதாயத்தில் நாட்டுநடப்பில்
நாள்தோறும் காண்கறீர்கள்
பலதரப்பட்ட மனிதர்கள்
இங்கே அங்கம் வகிக்கிறர்கள்
அதனுள் உங்களை மட்டுமே
நிஜமென்று நம்புகிறோம்
No comments:
Post a Comment