நீ திட்டிவிட்டுப் போகும்போது
நான் எட்டி நின்று பார்ப்பதனால்
சிகரத்தையே தொடுகிறேன்
சிறைபிடிக்க யாருமில்லை
நெஞ்சத்தின் உச்சத்தில்
நீ அமர்ந்திருக்கிறாய் - ஆனால்
உள்ளம் ஏனோ
அழுதுகொண்டுதானிருக்கிறது
உருண்டு புரள்வதிலையே
உறக்கம்
விடியலை அடைந்துவிடுகிறது
படித்த பாடங்கள்
மறந்து போகிறது
பாடப்புத்தகங்கள்
மூடியே இருக்கிறது
அழகான வார்த்தைகள்
ஒழிந்து கொள்கிறது
அகராதியில் பாதிப்பக்கங்கள்
கிழிந்து போகிறது
உன்னிடம் நீட்டிய
ஒற்றை றோஜாவோ
இராமாயண புத்தகத்தில்
காவியமாய் காய்ந்துகிடக்கிறது
மெல்லிய குரலில்
வேதனையின் ரணங்கள்
மெல்லிசை அமைக்கிறது
சுடு காட்டின் ஓசை
இசையாய் இனிக்கிறது
இறந்து போயிடவே
மனம் துடிக்கிறது
இறப்புக்குப் பின்னாலும்
காலம் முழுவதும்
பாடிக் கொண்டேயிருக்கும்
காதலின் அழகிய நினைவுகளை.
No comments:
Post a Comment